பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடகாவில் உயர்த்தப்பட்ட மின் கட்டணம்..மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆம் ஆத்மி அசத்தல் ஏற்பாடு

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக அரசு மின் கட்டணங்களை உயர்த்தியுள்ள நிலையில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஆம் ஆத்மி கட்சி, செல்போன் ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இந்த செல்போன் ஆப் மூலமாக, இப்போது செலுத்தக்கூடிய மின்சார தொகை மற்றும் இனி வரும் மாதங்களில் எந்த அளவுக்கு மின் கட்டணம் உயர போகிறது என்ற ஒப்பீட்டை பார்க்க முடியும். மக்கள் தங்கள் மின் கட்டண அளவை பதிவிட்டால் போதுமானது.

Karnataka Aam Aadmi party mobile app compares Bangalores Power bill with Delhis

மக்கள் மத்தியில் மின்கட்டண உயர்வு எந்த அளவுக்கு தங்கள் பர்சை பதம் பார்க்க போகிறது என்பது பற்றி இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றால் அது மிகையல்ல.

shock beda (ஷாக் வேண்டாம்) என்ற பெயரில் இந்த பிரச்சாரத்தை ஆம் ஆத்மி முன்னெடுத்துள்ளது.

இனி நான் ஸ்டாப்.. நவ.16ம் தேதிக்கு பிறகும் தமிழகம்-கர்நாடகா இடையே அரசு, தனியார் பஸ்கள் இயங்கும்இனி நான் ஸ்டாப்.. நவ.16ம் தேதிக்கு பிறகும் தமிழகம்-கர்நாடகா இடையே அரசு, தனியார் பஸ்கள் இயங்கும்

டெல்லியில் 200 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்குகிறது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு. அங்கு பெங்களூரை விட மின் கட்டணம் குறைவாக இருப்பதால் அங்குள்ள மின் கட்டணத்தையும் கர்நாடகாவில் உள்ள மின் கட்டணத்தையும் ஒப்பீடு செய்யும் வகையில் இந்த செல்போன் ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு வருடத்தில் பொதுமக்களிடமிருந்து எவ்வளவு ரூபாய் மின் கட்டணமாக செல்கிறது, இனிமேல் அது எந்த அளவுக்கு கூட உள்ளது என்ற விவரத்தையும் அதில் விளக்கமாக தெரிவித்துள்ளார்கள்.

கர்நாடக மாநில ஆம் ஆத்மி கன்வீனர் பிரித்வி ரெட்டி, இந்த செல்போன் ஆப்பை அறிமுகம் செய்து வைத்துள்ளார். கர்நாடகாவில் நவம்பர் 1ம் தேதி முதல் அனைத்து மின் வழங்கும் நிறுவனங்களும் 5.4 சதவீதம் அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Karnataka aam Aadmi party's mobile app shows how much the citizens will going to pay for power tariff.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X