பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடகாவில் நாளை முதல் பப்கள், கிளப்புகள், ஹோட்டல்களில் மதுபானங்கள் விநியோகிக்க அனுமதி

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகாவில் பப்கள், கிளப்புகள், ஹோட்டல்களில் செப்டம்பர் 1 முதல் மதுபானங்கள் விநியோகிக்க அனுமதி அளிக்கப்படுவதாக மாநில கலால்துறை அமைச்சர் நாகேஷ் அறிவித்துள்ளார்.

கொரோனா லாக்டவுனால் கர்நாடகாவில் தொடக்கத்தில் மதுபான கடைகள் மூடப்பட்டன. பின்னர் மதுபானங்களை வாங்கிச் செல்ல மட்டும் அனுமதிக்கப்பட்டது.

Karnataka allows serve liquor in pubs, clubs, bars from Sep.1

மதுபானங்கள் விற்பனை கட்டுப்பாடுகளால் ரூ1,435 கோடி நட்டம் ஏற்பட்டிருப்பதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மத்திய அரசு கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகள் பெரும்பாலானவற்றை தளர்த்திவிட்டது.

இதனையடுத்து மாநில அரசுகளும் கட்டுப்பாடுகளை தளர்த்தி இருக்கின்றன. கர்நாடகா மாநில அரசும் இதனடிப்படையில் பப்கள், கிளப்புகள், ஹோட்டல்களில் செப்.1 முதல் மதுபானங்கள் விநியோகிக்க அனுமதி அளித்திருக்கிறது. அதேநேரத்தில் இருக்கைகளில் 50% பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அதல பாதாளத்திற்கு போன ஜிடிபி... அப்போ ஐந்து லட்சம் கோடி டாலர் பொருளாதார வளர்ச்சி அரோகராவா?அதல பாதாளத்திற்கு போன ஜிடிபி... அப்போ ஐந்து லட்சம் கோடி டாலர் பொருளாதார வளர்ச்சி அரோகராவா?

இதனை அறிவித்த மாநில கலால்துறை அமைச்சர் நாகேஷ், மதுபானங்கள் விநியோகிக்க அனுமதிக்காமல் இருந்தால் அரசுக்கான நட்டம் ரூ3,000 கோடியை தாண்டியிருக்கும் என்றார். கர்நாடகா அரசானது நடப்பு ஆண்டுக்கான கலால் வரி வருவாய் ரூ 22,700 என இலக்கு நிர்ணயித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Karnataka Excise Minister Nagesh said that all the establishments will be allowed to serve liquor from Sep 1.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X