பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆளுநரின் 2வது கெடுவும் முடிவடைந்தது.. நடக்காத நம்பிக்கை வாக்கெடுப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடகத்தில் உச்சகட்ட பரபரப்பு..நம்பிக்கை வாக்கெடுப்பு..

    பெங்களூர்: கர்நாடகா முதல்வர் குமாரசாமி இன்று மாலை 6 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என மீண்டும் ஆளுநர் கெடு விதித்துள்ளார். இதனிடையே கொறடா உத்தரவு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.

    ஆளுநரின் கெடுவால், குமாரசாமி அரசு சிக்கலில் மாட்டியுள்ளது. கர்நாடக அரசியல் பிரச்சினை க்ளைமேக்ஸ் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று காலை 11 மணிக்கு சட்டசபை கூடியதும், ஆளும் கூட்டணி அரசும், எதிர்க்கட்சிகளும் எந்த மாதிரி நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இது தொடர்பான உடனடி தகவல்களுக்கு இணைந்திருங்கள் இந்த லைவ் பக்கத்தில்.

    Newest First Oldest First
    7:05 PM, 19 Jul

    கர்நாடக சட்டசபை இரவு 7.30 மணிவரை நடைபெற வாய்ப்பு. உறுப்பினர்கள் பலரும் பேச வேண்டியிருப்பதால், அவை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்படும்.
    6:06 PM, 19 Jul

    கர்நாடக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நிறைவேற்ற ஆளுநர் விதித்த 2வது கெடுவும் நிறைவடைந்தது. மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நிறைவேற்ற ஆளுநர் கெடு விதித்திருந்தார். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்னும் நடைபெறவில்லை.
    5:26 PM, 19 Jul

    கர்நாடக ஆளுநரின் 2வது கெடு நேரம் முடியப்போகிறது; சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான அறிகுறிகள் இல்லை
    3:39 PM, 19 Jul

    இன்று மாலை 6 மணிக்குள் குமாரசாமி நம்பிக்கை வாக்கு கோர மீண்டும் ஆளுநர் கெடு
    3:17 PM, 19 Jul

    எம்எல்ஏக்களுக்கு விப் பிறப்பிக்கும் விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக காங்கிரஸ் வழக்கு
    1:40 PM, 19 Jul

    கர்நாடக சட்டசபை மதியம் 3 மணிக்கு ஒத்திவைப்பு; உணவு இடைவேளைக்காக ஒத்திவைத்தார் சபாநாயகர்; இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவது பெரும் சந்தேகம்
    1:36 PM, 19 Jul

    கர்நாடக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் விதித்த கெடு முடிவடைந்தது. பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் அறிவுறுத்தினார். சட்டசபை விவகாரங்களில் ஆளுநர் தலையிட்டதற்கு குமாரசாமி அதிருப்தி. அமைச்சர்கள் பலரும், கர்நாடக சட்டசபையில் ஆளுநர் மீது குற்றச்சாட்டு.
    1:20 PM, 19 Jul

    ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் சட்டசபையில், கோஷம்.. கோஷங்களால் அவை நடவடிக்கை பாதிப்பு.. பாஜக ஏஜென்ட் ஆளுநர் என கோஷங்கள்
    11:49 AM, 19 Jul

    எனக்கு முதல்வர் பதவி முக்கியம் இல்லை.. இந்த பதவி நிரந்தரம் இல்லை.. நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தில், குமாரசாமி உரை; எங்கள் தந்தை செங்கோட்டை வரை சென்று கொடியேற்றியவர்.. அதிகார தாகம் எங்களுக்கு இல்லை என்றும் குமாரசாமி பேச்சு
    11:18 AM, 19 Jul

    எந்த அலுவல்களுக்கும் வாய்ப்பு தர முடியாது என சபாநாயகர் திட்ட வட்டம். முதல்வர் குமாரசாமியை நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது பேச சபாநாயகர் உத்தரவு. குமாரசாமி தனது உரையை ஆரம்பித்தார்
    11:09 AM, 19 Jul

    கர்நாடக சட்டசபையின் கூட்டம் தொடங்கியது. இன்றாவது நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா என எதிர்பார்ப்பு
    10:31 AM, 19 Jul

    நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர் கெடு விதித்தது சட்ட விரோதம்- காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ். எடியூரப்பா பெரும்பான்மை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் கொடுத்தவர் ஆளுநர்- குண்டுராவ் குற்றச்சாட்டு
    10:30 AM, 19 Jul

    காங்கிரஸ் நோட்டீஸ்

    கர்நாடகா அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சியும் லோக்சபாவில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளது.
    10:30 AM, 19 Jul

    கர்நாடகா விவகாரம்- திரிணாமுல் எம்.பி நோட்டீஸ்

    கர்நாடகா எம்.எல்.ஏக்கள் கடத்தப்பட்டது குறித்து லோக்சபாவில் விவாதிக்க திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. செளகதா ராய் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
    10:25 AM, 19 Jul

    உச்சநீதிமன்றத்துக்கு போகும் காங்கிரஸ்

    கர்நாடகா சபாநாயகரின் நடவடிக்கைகளில் ஆளுநர் தலையிடுவதை எதிர்த்து காங்கிரஸும் உச்சநீதிமன்றத்துக்கு செல்லும் என அக்கட்சியின் எம்.பி. நசீர் ஹூசைன் தெரிவித்துள்ளார். கர்நாடகா ஆளுநர் ஒரு கட்சியின் ஏஜெண்ட்டாக செயல்படுவதாகவும் நசீர் ஹூசைன் குற்றம்சாட்டியுள்ளார்.
    10:01 AM, 19 Jul

    கர்நாடகா சட்டசபையில் பலம்:

    எம்.எல்.ஏக்கள் ராஜினமாவுக்கு முன்பு: பாஜக- 105; காங்கிரஸ்- 79 ; ஜேடிஎஸ்- 37; பகுஜன் சமாஜ்-1; சுயேட்சைகள்- 2. எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவுக்கு பின்... பாஜக -105; காங்கிரஸ் -67 ; ஜேடிஎஸ்- 34 ; பகுஜன் சமாஜ்-1; சுயேட்சைகள்-2. சட்டசபைக்கு வராத எம்.எல்.ஏக்கள்: காங்கிரஸ்-12 ; ஜேடிஎஸ்- 3.
    9:52 AM, 19 Jul

    சட்டசபை கூடுவதற்கு முன்பாக எடியூரப்பாவுடன் பாஜக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
    9:49 AM, 19 Jul

    கர்நாடகா சட்டசபைக்குள் விடிய விடிய தர்ணா போராட்டம் நடத்திய பா.ஜ.க. எம்.எல்.ஏக்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார் துணை முதல்வர் பரமேஸ்வரா.
    9:48 AM, 19 Jul

    கர்நாடகா சட்டசபைக்குள்ளே தூங்கி எழுந்த பாஜக எம்.எல்.ஏக்களை துணை முதல்வர் பரமேஸ்வரா சந்தித்தார்.
    9:31 AM, 19 Jul

    பெரும்பான்மையை நிரூபிக்க கெடு விதித்த ஆளுநரின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்கிறாரா குமாரசாமி? இன்றே உச்சநீதிமன்றத்தில் குமாரசாமி வழக்கு தொடர முடிவு என்று தகவல்.
    6:27 PM, 18 Jul

    கர்நாடக சட்டசபை நாளை காலை 11 மணிக்கு ஒத்திவைப்பு; இரவு முழுக்க சட்டசபைக்குள்ளேயே தங்க பாஜக எம்எல்ஏக்கள் முடிவு
    5:49 PM, 18 Jul

    காங்கிரஸ் எம்எல்ஏ ஸ்ரீமந்த் பாட்டீல் போட்டோவை காண்பித்து சட்டசபையில் காங். எம்எல்ஏக்கள் தர்ணா; 'கிட்னாப்பர்ஸ் பாஜக டவுன், டவுன்' என்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கோஷம்; ஸ்ரீமந்த் பாட்டீல், பாஜகவினரால் மும்பை கடத்தி செல்லப்பட்டதாக கோஷம்; பாஜக ஒழிக என்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர் கோஷம்
    5:12 PM, 18 Jul

    இரவு 12 மணிவரை சட்டசபையை நடத்தி, நம்பிக்கை வாக்கெடுப்பை நிறைவேற்றுங்கள்- எடியூரப்பா. நம்பிக்கை வாக்கெடுப்பை தாக்கல் செய்த அன்றே நிறைவேற்றுவது மரபு- எடியூரப்பா கோரிக்கை.
    5:00 PM, 18 Jul

    ஆளுநரிடமிருந்து கர்நாடக சபாநாயகருக்கு திடீர் கடிதம். முதல்வர் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை இன்றே நிறைவேற்ற வேண்டும்- ஆளுநர். ஜனநாயகத்தை காப்பாற்ற இந்த நடைமுறை அவசியம்- சபாநாயகருக்கு ஆளுநர் கடிதம்.
    4:00 PM, 18 Jul

    நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சபாநாயகர் உத்தரவிடாமல் இழுத்தடிப்பதாக பாஜக குற்றச்சாட்டு. பாஜக எம்எல்ஏக்கள் கோஷத்தால் சட்டசபை அரை மணி நேரத்திற்கு ஒத்திவைப்பு.
    3:28 PM, 18 Jul

    உணவு இடைவேளைக்கு பிறகு கர்நாடக சட்டசபை மீண்டும் கூடியது. காங்கிரஸ் எம்எல்ஏ ஸ்ரீமந்த் பாட்டீல் பாஜகவினரால் விமானத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளார்- டி.கே.சிவகுமார். மும்பைக்கு ஸ்ரீமந்த் பாட்டீல் பாஜகவினரால் கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சபாநாயகரிடம் டி.கே.சிவகுமார் பகிரங்க குற்றச்சாட்டு.
    1:42 PM, 18 Jul

    உணவு இடைவேளைக்காக கர்நாடக சட்டசபை ஒத்திவைப்பு. 3 மணிக்கு மீண்டும் அவை கூடும் என அறிவித்தார் சபாநாயகர்.
    1:42 PM, 18 Jul

    உச்சநீதிமன்ற தீர்ப்பால் விப் கொடுத்தாலும் அதிருப்தி எம்எல்ஏக்கள் சட்டசபை வர மாட்டார்கள்- சித்தராமையா
    1:42 PM, 18 Jul

    அதிருப்தி எம்எல்ஏக்கள் வராவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு பெரும் பிரச்சினையாகும்- சித்தராமையா. எனக்கு விப் பிறப்பிக்க உத்தரவு அதிகாரம் உள்ளதா, இல்லையா என்பது தீர்மானமாக வேண்டும். விப் அதிகாரம் பற்றி ஒரு முடிவுக்கு வந்த பிறகுதான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
    1:39 PM, 18 Jul

    'பாயின்ட் ஆப் ஆர்டர்' விவகாரம் பற்றி தொடர்ந்து பேசி சித்தராமையா காலம் கடத்துகிறார்- பாஜகவினர் கோஷம்
    READ MORE

    Karnataka Floor Test Live Updates: Will the Kumaraswamy government get majority?
    English summary
    Karnataka Floor Test will be held on today, here you can find live updates on the political crisis.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X