பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் ராஜினாமா

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகா சட்டசபையில் முதல்வர் எடியூரப்பா இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். நூலிழை மெஜாரிட்டியுடன் இருக்கும் எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்புவாரா? இல்லையா? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் ஜேடிஎஸ் -காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்பட்டு முதல்வராக பாஜகவின் எடியூரப்பா பதவி ஏற்றுள்ளார். எடியூரப்பா தமது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து இன்று சட்டசபையில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். முன்னதாக சபாநாயகர் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 14 பேரை நேற்று அதிரடியாக தகுதி நீக்கம் செய்தார். இதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்து.

Newest First Oldest First
12:30 PM, 29 Jul

சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார் ரமேஷ் குமார். துணை சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் அளித்துவிட்டு கிளம்பினார். சட்டசபை மாலை 5 மணிக்கு ஒத்தி வைப்பு.
12:23 PM, 29 Jul

சட்டசபையில் பிரிவு உரை நிகழ்த்துகிறார் சபாநாயகர் ரமேஷ் குமார்

ஊழல் ஆரம்பிப்பது தேர்தல் நடைமுறையில்தான், தேர்தல் நடைமுறையை மாற்ற கர்நாடக சட்டசபை முன்வர வேண்டும்
11:48 AM, 29 Jul

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசுக்கு வெற்றி. குரல் வாக்கெடுப்பு மூலம் எடியூரப்பா தாக்கல் செய்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் நிறைவேறியது .
11:36 AM, 29 Jul

அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எடியூரப்பா நன்றி தெரிவித்து நம்பிக்கை தீர்மானத்தை தாக்கல் செய்திருக்க வேண்டும். 17 தகுதி நீக்க எம்எல்ஏக்களை கைவிட்டு விடாதீர்கள் என எடியூரப்பாவை கேட்டுக்கொள்கிறேன்- குமாரசாமி பேச்சு.
11:35 AM, 29 Jul

அதிருப்தி எம்எல்ஏக்களை பாஜகவினர் தெருவில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர்- சட்டசபையில் குமாரசாமி பேச்சு
11:25 AM, 29 Jul

எடியூரப்பா தாக்கல் செய்துள்ள நம்பிக்கை தீர்மானம் சட்ட விரோதமானது- சட்டசபையில் சித்தராமையா பேச்சு
11:25 AM, 29 Jul

எடியூரப்பா முதல்வராக தொடர வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஆனால் அது கேரண்டி இல்லை- சித்தராமையா பேச்சு
11:07 AM, 29 Jul

சித்தராமையா, குமாரசாமி ஆட்சியில் எதிர்க்கட்சிகளை பழி வாங்கவில்லை- எடியூரப்பா. நானும் துவேச அரசியலை முன்னெடுக்க மாட்டேன்- சட்டசபையில் எடியூரப்பா பேச்சு. மறப்போம், மன்னிப்போம் என்ற கொள்கையில் எனக்கு நம்பிக்கை உள்ளது. பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரின் ஆதரவால் முதல்வராகியுள்ளேன்.
11:06 AM, 29 Jul

நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை சட்டசபையில் தாக்கல் செய்தார் எடியூரப்பா. தீர்மானத்தின் மீது எடியூரப்பா உரையாற்ற துவங்கினார்.
11:05 AM, 29 Jul

பதவியை ராஜினாமா செய்கிறார் சபாநாயகர்

கர்நாடகா சபாநாயகர் ரமேஷ்குமார் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக சூசகமாக தெரிவித்துள்ளார்.
11:04 AM, 29 Jul

சபாநாயகர் ரமேஷ்குமார் வருகையை தொடர்ந்து வந்தே மாதரம் பாடலுடன், கர்நாடக சட்டசபை அலுவல் துவங்கியது
11:03 AM, 29 Jul

குரல் வாக்கெடுப்பு மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என தகவல்
11:00 AM, 29 Jul

நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள உள்ள நிலையில் சட்டசபைக்கு வருகை தந்தார் முதல்வர் எடியூரப்பா
10:59 AM, 29 Jul

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 3 எம்.எல்.ஏக்கள் வழக்கு

கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 3 எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
10:54 AM, 29 Jul

யாருடைய தூண்டுதலாலும் பதவியை ராஜினாமா செய்யவில்லை- தகுதி நீக்க எம்எல்ஏ பசவராஜ் பேட்டி. பெங்களூர் கே.ஆர்.புரம் தொகுதியின் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ பைரப்பா பசவராஜ் பேட்டி.
9:35 AM, 29 Jul

பெரும்பான்மைக்கு தேவை 104

கர்நாடகா சட்டசபையில் தற்போதைய பலம் 207. பெரும்பான்மைக்கு தேவை 104. பாஜக எம்.எல்.ஏக்கள் 105 பேர் உள்ளனர். சுயேட்சை ஒருவர் பாஜகவுக்கு ஆதரவு. தற்போதைய நிலையில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
9:35 AM, 29 Jul

உச்சநீதிமன்றத்தில் அப்பீல்

தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மேல்முறையீடு செய்ய உள்ளனர்.
9:35 AM, 29 Jul

சபாநாயகருக்கு எதிராக தீர்மானம்

நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றால் சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது எடியூரப்பா அரசு.

Karnataka Assembly- Trust vote today
English summary
Yeddiyurappa takes the floor test today after he was sworn in as Karnataka Chief Minister on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X