பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கர்நாடகாவில் பந்த்.. பேருந்து மீது கல்வீச்சு.. பதற்றம் பேச்சுவார்த்தைக்கு முதல்வர் அழைப்பு

Google Oneindia Tamil News

பெங்களூரு: கன்னடர்களுக்கே வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் அளிக்க கோரி கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டதில் ஈடுபட்ட சிலர் பரங்கி பேட்டில் பேருந்து மீது கல்வீசியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கன்னட அமைப்பினரை பேச்சுவார்த்தைக்கு வருமாறு கர்நாடகா முதல்வர் எடியூரப்பா அழைத்துள்ளார்.

அரசு மற்றும் தனியார் துறையில் கன்னடர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என மாநில அரசால் அமைக்கப்பட்ட டாக்டர் சரோஜினி மஹிஷி தலைமையிலான ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.

கன்னட அமைப்புகள்

கன்னட அமைப்புகள்

கடந்த 1984-ம் ஆண்டு கொடுத்த இந்த பரிந்துரையை இதுவரை எந்த கர்நாடகா அரசும் அமல்படுத்தவில்லை. இந்த பரிந்துரையை உடனே அமல்படுத்த வேண்டும் என்று கோரி, கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்திற்கு 100க்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளன.

ஆட்டோ ஓட்டுநர்கள் ஆதரவு

ஆட்டோ ஓட்டுநர்கள் ஆதரவு

கன்னட சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் நாகேஷ் தலைமையில் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்திற்கு கர்நாடகாவில் உள்ள ஓட்டல்கள் சங்கம், கர்நாடகா திரைப்பட வர்த்தகசபை, கர்நாடகா மாநில திரையரங்குகள் சங்கம், மருந்து விற்பனையாளர்கள் சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட சில வர்த்தக அமைப்புகள் ஆதரவு தெரிவிக்கவில்லை. அதேநேரம் கர்நாடகாவில் ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள், தனியார் பஸ் உரிமையாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரவித்துள்ளன.

பேருந்து மீது கல்வீச்சு

பேருந்து மீது கல்வீச்சு

இதற்கிடையே அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் பள்ளிகள் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் கர்நாடகா அரசு அறிவித்தது. இதன்படி பேருந்துகள் வழக்கம் போல் இயங்குகின்றன. இந்நிலையில் பரங்கிபேட்டில் கன்னட அமைப்பினர் சிலர் திருப்பதி -மங்களூரு பேருந்து மீது கல்வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பயணிகள் குறைவு

பயணிகள் குறைவு

பந்த் என்ற போதிலும் பெங்களூரில், நகரப் பேருந்துகள் வழக்கம் போல் ஓடின, அவற்றில் பெரும்பாலான பயணிகள் குறைவாக இருந்ததால் பெரும்பாலானவை கிட்டத்தட்ட காலியாக ஓடின. ஆட்டோரிக்ஷா ஓட்டுநர் சங்கங்களில் ஒன்று பந்திற்கு ஆதரவளித்த போதிலும் ஆட்டோரிக்ஷாக்கள் வழக்கம் போல் இயங்கின. நகரின் முக்கிய வர்த்தக பகுதி, கே.ஆர் சந்தை மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்கள் காலை நேரங்களில் பந்த் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

கன்னட அமைப்பினர்

கன்னட அமைப்பினர்

கன்னட அமைப்பினர் நகரில் உள்ள வர்த்தகர்களிடம் கடைகளை மூடுமாறு கேட்டுக்கொண்டனர். கர்நாடக-தமிழ்நாடு எல்லையில் உள்ள அத்திபிளே அருகிலுள்ள அனேகலில், கன்னட அமைப்பினர் கடைகளையும் வணிக நிறுவனங்களையும் வலுக்கட்டாயமாக மூட முயன்றதாக கூறப்படுகிறது. பந்த் காரணமாக பல இடங்களில் போலீசார் முன்னெச்சரிக்கையாக குவிக்கப்பட்டிருந்தனர்.

பேச்சுவார்த்தை

இந்த சூழலில் முதல்வர் எடியூரப்பா, பொதுமக்களை பாதிக்காத வகையில் போராட்டம் நடத்துமாறு கன்னட அமைப்பினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த பிரச்சனை தொடர்பாக என்னுடன் விவாதிக்க அவர்கள் தயாரா என்று தெரியவில்லை. ஆனால் நான் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவே இருக்கிறேன். நாங்கள் ஏற்கனவே பலவற்றைச் செய்துள்ளோம் (சரோஜினி மஹிஷி அறிக்கையை செயல்படுத்த), வேறு என்ன செய்ய முடியும் என்பது குறித்து அவர்களுடன் பேச நான் தயாராக இருக்கிறேன் " என்றார்.

English summary
Karnataka Bandh: Buses, autos plie as usual, Protesters hurl stones at bus, CM invites pro-Kannada outfits for talks
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X