பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சித்தார்த்தா மரணத்திலும் அரசியல்.. காங்கிரஸும், பாஜகவும் எப்படி மோதிக்கொள்கிறார்கள் பாருங்க

Google Oneindia Tamil News

பெங்களூர்: காணாமல் போன 36 மணி நேரத்திற்குப் பிறகு, இன்று காலை, மங்களூரு அருகே ஒரு ஆற்று பாலத்தின் கீழே இருந்து இறந்து கிடந்த நிலையில் கபே காபி தின நிறுவனர் வி.ஜி. சித்தார்த்தா உடல் கண்டெடுக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காபி டே குழு உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அவர் எழுதியதாக கூறப்படும், கடிதம் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இது பாஜக மற்றும் காங்கிரஸின் கர்நாடக மாநில பிரிவினர் இடையே டிவிட்டர் மோதலுக்கு வழி வகுத்துள்ளது.

Karnataka BJP, Congress clash over VG Siddhartha

சித்தார்த்தா, வருமான வரி அதிகாரியால் தான் துன்புறுத்தப்பட்டதாகவும், சரியான லாபகரமான வணிகத்தை உருவாக்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்ததாகவும், அந்த கடிதத்தில், கூறியிருந்தார்.

இன்று காலை 8.32 மணிக்கு இது தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் கட்சி ஒரு ட்வீட் வெளியிட்டது. அதில், சித்தார்த்தா துயர மரணம் துரதிர்ஷ்டவசமானது. "வருமான வரி அதிகாரிகளின் துன்புறுத்தலின்" விளைவு சித்தார்த்தாவின் மரணமாகும். நாட்டின் தொழில் முனைவோர் வட்டாரங்களில் "கடுமையான" வீழ்ச்சி ஆரம்பித்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கீழ் செழித்த நிறுவனங்கள் பலவும், இப்போது மூடப்பட்டுள்ளன," இவ்வாறு காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலடியாக கர்நாடக பாஜக அதே டிவிட்டை ரீ டிவீட் செய்து காங்கிரசை குற்றம் சாட்டியுள்ளது.

சித்தார்த்தாவின், குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துகின்றன, அரசியல் கழுகுகள்.
இந்த துயர சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைகளை விசாரணையில் தெரியவரும். அதுவரை வெகுஜனங்களின் உணர்வை மதிக்கவும், ஏதேனும் இருந்தால் மனிதாபிமானத்தை காட்டவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் கர்நாடக முதல்வருமான சித்தராமையாவும் "வரி பயங்கரவாதம் ... அரசியல் நோக்கம் கொண்ட அரசு நிறுவனங்களின் அசிங்கமான முகம்" என்று விமர்சித்துள்ளார்.

English summary
A letter reportedly written by Cafe Coffee Day founder VG Siddhartha, has sparked a war of words on Twitter between the state units of the BJP and the Congress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X