பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடகா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட சபாநாயகரிடம் பாஜக வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

Recommended Video

    Karnataka Politics : கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க எத்தனை இடங்கள் தேவை?- வீடியோ

    பெங்களூரு: கர்நாடகா சட்டசபையில் முதல்வர் குமாரசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று சபாநாயகர் கே.ஆர். ரமேஷிடம் பாஜக தலைவர் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்.

    கர்நாடகா அரசியலில் உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆளும் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் 16 பேர் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். இதனால் முதல்வர் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.

    Karnataka: BJP urges Speaker to hold floor test today

    அத்துடன் ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளனர். இருப்பினும் தம்மால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என அதிரடியாக அறிவித்தார் முதல்வர் குமாரசாமி.

    இதையடுத்து பாஜக தமது எம்.எல்.ஏக்களை தக்க வைக்க பகீரத முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் கர்நாடகா சட்டசபை கூடுகிறது.

    முன்னதாக சபாநாயகர் கே.ஆர். ரமேஷை சந்தித்த ஜேடிஎஸ்-காங்கிரஸ் தலைவர்கள் எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்காமல் தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தினர். அதேபோல் சபாநாயகரை சந்தித்த பாஜக தலைவர் எடியூரப்பா, முதல்வர் குமாரசாமி அரசு பெரும்பான்மையை உடனே நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.

    தற்போது கர்நாடகா சட்டமன்ற அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் குமாரசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக வலியுறுத்துகிறது.

    English summary
    Karnataka BJP chief BS Yeddyurappa has demanded Chief Minister HD Kumaraswamy face a trust vote in assembly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X