பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடக பட்ஜெட்: பெங்களூருக்கு பல திட்டங்கள் அறிவிப்பு.. மதுபானம், பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது

Google Oneindia Tamil News

பெங்களூர்: 2020-2021 நிதியாண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை, நிதித்துறையை நிர்வகிக்கும், அம்மாநில முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். பெங்களூர் நகருக்கான திட்டங்கள் உட்பட பல முக்கிய அறிவிப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன.

Karnataka Budget 2020 Highlights: Bangalore gets many schemes

மேலும், கர்நாடகாவில் மதுபானங்கள், பெட்ரோல், டீசல்கள் மீதான வரியை அதிகரித்திருப்பதால், ஏப்ரல் 1ம் தேதி முதல் அவற்றின் விலை உயர உள்ளது.

Karnataka Budget 2020 Highlights: Bangalore gets many schemes

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய தகவல்கள் இதோ:

பெட்ரோல் மீதான, வாட், வரி 32 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாகவும் டீசல் மீது, 21 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாகவும் உயர்த்தப்படும். இந்தியன் மேட் மதுபானம் (கே.எம்.எல்) மீதான கலால் வரி 18 அடுக்குகளில் ஆறு சதவீதம் அதிகரிக்கப்படும். பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி விகிதம் மூன்று சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், லிட்டருக்கு, முறையே, ரூ .1.60 மற்றும் ரூ .1.59 விலை உயரப்போகிறது. ஏப்ரல் 1 முதல் இது அமலுக்கு வரும்.

Karnataka Budget 2020 Highlights: Bangalore gets many schemes
  • எஸ்.எஸ்.எல்.சியில் முதல் ரேங்க் வாங்கும் மாணாக்கருக்கு ரூ .1 லட்சம் பரிசுத் தொகை
  • சுரக்ஷா ஆப், மாநிலம் முழுவதும் நீட்டிக்கப்படும்
  • பெங்களூரு நகரத்திற்கான பிரத்யேக பட்ஜெட் அறிவிப்புகளை பாருங்கள்:
  • பெங்களூரில், மின்சார வாகன சார்ஜிங் பாயிண்ட்டுகளை நிறுவ ரூ .10 கோடி
  • பெங்களூரு அரசு அலுவலகங்களில் பெண்களுக்களுக்கு உகந்த சூழல்
  • பெங்களூரில் நான்கு புதிய தகன தளங்கள் உருவாக்கப்படும்
  • மெட்ரோ நிலையங்களை இணைக்க 24 ஸ்கைவாக்ஸ்
  • 90 மின்சார பேருந்துகள் வாங்கப்பட உள்ளன
  • மின்சார பைக், டாக்ஸி திட்டம் அறிமுகம் செய்யப்படும்
  • நகரத்திற்குள் நுழைவதற்கு நீண்ட தூர பேருந்துகளுக்கு தடை விதித்து, அதற்கு பதில் பொது-தனியார் கூட்டுறவில் ஒருங்கிணைந்த மாதிரி போக்குவரத்து மையம் ஏற்படுத்துவது.
  • ஹெப்பால், சில்க் போர்டு மற்றும் கே.ஆர்.புரம் சந்திப்புகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும்
  • சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க, நிலத்தடி பார்க்கிங் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்
  • நகர ஏரிகள் சுத்திகரிக்கப்பட்ட நீரால் நிரப்பப்பட வேண்டும்
  • புதிய மெட்ரோ லைன்கள் ஹெப்பால் முதல் ஜே.பி.நகர் மற்றும் மாகடி சாலை வரை ஆராயப்பட உள்ளன
  • ஒயிட்ஃபீல்டில் புதிய போக்குவரத்து சப்-டிவிஷன்
  • உலகளாவிய திரைப்பட நகரம் பெங்களூரில் மட்டும் அமையும், மைசூரில் அல்ல.
  • பெங்களூரில் கழிவு நீர் வடிகால் வசதிக்கு ரூ .200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
  • புகழ்பெற்ற ரவீந்திர கலாக்ஷேத்ரா போன்று, இன்னும் புதிதாக, நான்கு ஆடிட்டோரியங்கள் கட்டப்பட உள்ளன
  • ஏரிகள் வளர்ச்சிக்கு ரூ .100 கோடி
  • பெங்களூரில் உள்ள பயோ ஆய்வு மையத்திற்கு ரூ .20 கோடி
  • பெங்களூரில் தொல்லை செய்யும், குரங்குகளை இடமாற்றம் செய்ய சிறப்பு நிதி
  • 2,450 பேருந்துகள் பெங்களூர் நகர போக்குவரத்துக் கழகமான, பிஎம்டிசியால் வாங்கப்படும்
  • சேதமடைந்த 6,649 வகுப்பறைகள் மீண்டும் கட்டப்படும்
  • தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அலுவலகங்கள் மட்டும், பெலகாவியிலுள்ள, சுவர்ண சவுதாவுக்கு மாற்றப்படும்
  • போலீசாருக்கு 75 புதிய ஹொய்சலா ரோந்து, வேன்கள் வாங்கிக் கொடுக்கப்படும்
  • போலீஸ் நாய் பிரிவுக்கு ரூ .2.5 கோடி ஒதுக்கீடு. இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியிட்டார் எடியூரப்பா.
English summary
Karnataka Budget 2020 presented by CM BS Yeddyurappa, Bangalore gets lion share out of it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X