பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடகாவில் நடந்த 15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்.. 66.25 சதவீதம் வாக்குகள் பதிவு

Google Oneindia Tamil News

Recommended Video

    செய்தி தெரியுமா | 05-12-2019 | Morning News | oneindia tamil

    பெங்களூரு: கர்நாடகாவில் இன்று (வியாழக்கிழமை) நடந்த 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் மாலை 6 மணியுடன் முடிந்த வாக்குப்பதிவு நிலவரப்படி 66.25 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    கர்நாடகாவில் பாஜகவுக்கு ஆதரவாக 17 காங்கிரஸ்-ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்கள் கட்சி தாவியதால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இத்தகுதி நீக்கத்தை உறுதி செய்த உச்சநீதிமன்றம் அவர்கள் இடைத்தேர்தல்களில் போட்டியிடவும் அனுமதித்தது. இதில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடந்து முடிந்தது. இதனை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    இறுதியாக மாலை 6 மணி நிலவரப்படி 15 சட்டசபை தொகுதிகளில் 66.25 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. .

    Newest First Oldest First
    3:45 PM, 5 Dec

    மாலை 3 மணி வரை பதிவான வாக்குகள் விவரம்:
    1:08 PM, 5 Dec

    முற்பகல் 11 மணிவரையில் 17.60% வாக்குகள் பதிவு
    11:33 AM, 5 Dec

    முதல் 2 மணிநேரத்தில் 6.06% வாக்குகள் பதிவு
    10:31 AM, 5 Dec

    பெங்களூர்: கர்நாடக இடைத்தேர்தலில் 15 தொகுதிகளில் 9 மணி வரை 4% வாக்குப்பதிவு
    10:31 AM, 5 Dec

    பெங்களூர்: கர்நாடக இடைத்தேர்தலில் பெங்களூரில் காலை 9 மணி வரை 2%க்கும் குறைவாக வாக்குப்பதிவு
    9:49 AM, 5 Dec

    புவனஹல்லியில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு- வாக்குப் பதிவு நிறுத்தம்
    9:03 AM, 5 Dec

    15 தொகுதிகளில் இடைத்தேர்தல் என்பதால் இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
    9:03 AM, 5 Dec

    சிவாஜிநகரில் பாஜக வேட்பாளர் சரவணா வாக்களித்தார்
    9:02 AM, 5 Dec

    பாஜக எம்பி பச்சேகவுடாவின் பேரன் வருண், லண்டனில் இருந்து வாக்களிக்க வந்தார்
    9:02 AM, 5 Dec

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு எதிராக கே.ஆர்.புரம் வாக்குச்சாவடியில் 2 பேர் ஆர்ப்பாட்டம்
    8:40 AM, 5 Dec

    தெற்கு கர்நாடகாவில் மட்டும்தான் ஜேடிஎஸ் களத்தில் இருக்கிறது
    8:40 AM, 5 Dec

    பெரும்பாலான தொகுதிகளில் பாஜக- காங்கிரஸ் என இருமுனைப் போட்டி நிலவுகிறது
    8:05 AM, 5 Dec

    மொத்தம் 225 எம்.எல்.ஏக்களை (சபாநாயகரையும் சேர்த்து) கொண்ட கர்நாடகா சட்டசபையில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவுக்கு மேலும் 6 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. (2 இடங்கள் காலியாக உள்ளன)
    8:03 AM, 5 Dec

    கர்நாடகா சட்டசபை பலம் நிலவரம்: எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்துக்குப் பின்னர் சட்டசபையில் மொத்த இடங்கள் 208; பாஜக- 105; காங்கிரஸ்- 66; ஜேடிஎஸ்- 34. பகுஜன் சமாஜ்-1, நியமன எம்.எல்.ஏ-1, சபாநாயகர்-1
    8:01 AM, 5 Dec

    அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பாஜக ஆலோசனை
    7:54 AM, 5 Dec

    சிவாஜிநகர் தொகுதியில் காலையிலே வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்கள்
    7:54 AM, 5 Dec

    வாக்காளர்கள் நீண்ட வரிசைகளில் நின்று வாக்களித்து வருகின்றனர்
    7:53 AM, 5 Dec

    ஜேடிஎஸ் கட்சி 12 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது
    7:53 AM, 5 Dec

    15 தொகுதிகளிலும் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்
    7:53 AM, 5 Dec

    தகுதி நீக்கம் செய்யப்பட்டோரில் 14 பேர் மீண்டும் பாஜக வேட்பாளர்களாக போட்டியிட்டுள்ளனர்
    7:35 AM, 5 Dec

    இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்று வரும் 15 தொகுதிகள் விவரம்: அதானி, காக்வாட், கோகாக், எல்லாப்பூர், இரேகெரூர், ராணிபென்னூர், விஜயநகர், சிக்பள்ளாப்பூர், கே.ஆர்.புரம், யஷ்வந்தபுரம், மகாலட்சுமி லே-அவுட், சிவாஜி நகர், ஒசக்கோட்டை, கே.ஆர்.பேட்டை, உன்சூர்
    7:29 AM, 5 Dec

    37,77,970 வாக்காளர்கள் இன்று வாக்களிக்கின்றனர்.
    7:29 AM, 5 Dec

    இன்றைய தேர்தல் களத்தில் 165 வேட்பாளர்கள் உள்ளனர். 9 பேர் பெண்கள்
    7:01 AM, 5 Dec

    தற்போதைய முதல்வர் எடியூரப்பா ஆட்சி நீடிக்க 15 தொகுதிகளில் 6-ல் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடி உள்ளது.
    7:01 AM, 5 Dec

    இன்று பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 9-ந் தேதி எண்ணப்படும்
    7:01 AM, 5 Dec

    பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளில் துணை ராணுவப் படை அணிவகுப்பு
    7:01 AM, 5 Dec

    அதிக அளவில் வாக்குகள் பதிவாகும் என அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்பார்ப்பு
    7:01 AM, 5 Dec

    காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது
    6:32 AM, 5 Dec

    15 தொகுதிகளில் 4,185 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
    6:32 AM, 5 Dec

    15 தொகுதிகளில் 19,299 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    READ MORE

    Karnataka By Elections: 15 constituencies go to polls today
    English summary
    15 Assembly constituencies will go to By Elections on today in Karnataka.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X