பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தலை தப்பியது.. இனி எதுவும் செய்யலாம்.. அமித் ஷா வைத்த ஆசிட் டெஸ்டில் வென்ற எடியூரப்பா!

கர்நாடகாவில் பாஜக கட்சி முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க உள்ளதால், அந்த கட்சிக்குள் நிலவி வந்த அனைத்து விதமான பூசல்களும் சரியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடகாவில் 12 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக !

    பெங்களூர்: கர்நாடகாவில் பாஜக கட்சி முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க உள்ளதால், அந்த கட்சிக்குள் நிலவி வந்த அனைத்து விதமான பூசல்களும் சரியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக கர்நாடகாவில் எடியூரப்பா மீண்டும் மிக முக்கியமான தலைவராக உருவெடுக்க உள்ளார்.

    கர்நாடகாவில் நடந்த 15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. அங்கு 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இந்த சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் - மஜத - பாஜக என்று மும்முனை போட்டி நிலவியது.

    தற்போது பாஜக ஆரம்பத்திலேயே 11 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. 1 இடத்தில் மஜத முன்னிலை வகித்து வருகிறது. இன்னும் 2 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

    என்ன சந்தோசம்

    என்ன சந்தோசம்

    இதனால் எடியூரப்பாகி அங்கு மெஜாரிட்டியுடன் ஆட்சியை தொடர உள்ளார். எடியூரப்பா என்னதான் கர்நாடகாவில் பாஜகவின் முகமாக இருந்தாலும், அவரை எப்படியாவது கழற்றி விட வேண்டும் என்றுதான் பாஜக தேசிய தலைமை நினைத்து இருக்கிறது. பல முறை பாஜக இதற்காக நேரடியாகவும், மறைமுகமாகவும் முயன்றுள்ளது. ஆனால் ஒவ்வொருமுறையும் இதில் பாஜக மிக மோசமாக தோற்றது.

    மிக மோசம்

    மிக மோசம்

    2013ல் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன் கூட எடியூரப்பா பாஜகவில் இருந்து விலகி தனியாக தேர்தலை சந்தித்தார். எடியூரப்பா பாஜகவில் இருந்து விலகினார் என்பதை விட அவர் நீக்கப்பட்டார் என்பதுதான் மிகவும் சரியான விஷயமாக இருக்கும். இதனால் பிரிந்த வாக்குகள்தான் அப்போது காங்கிரஸ் கட்சியின் சித்தராமையாவை முதல்வராக்கியது.

    பாஜக புரிந்தது

    பாஜக புரிந்தது

    அப்போதுதான் எடியூரப்பாவின் முக்கியத்துவத்தை பாஜக புரிந்து கொண்டது. அதன்பின் 2018 தேர்தலுக்கு பின்பு கூட எடியூரப்பாவை ஓரம் கட்டி வேறு தலைவர்களை கர்நாடகாவில் முன்னிறுத்ததான் பாஜக முயன்றது. எடியூரப்பா தன்னிச்சையாக முடிவு எடுக்கிறார். அவர் பாஜக தேசிய தலைவர்களுக்கு மதிப்பு தருவது இல்லை.

    தனிக்கட்சி

    தனிக்கட்சி

    கர்நாடக பாஜகவை அவர் தனி கட்சி போல நடத்தி வருகிறார் என்று புகார் அடிக்கடி வந்தது. இதனால்தான் பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா தொடங்கி சில கர்நாடக மாநில மூத்த உறுப்பினர்களும் எடியூரப்பாவை அமைதியாக்க முயன்றார்கள். அதற்கு அவர்கள் வைத்த டெஸ்ட்தான் இந்த 15 தொகுதி இடைத்தேர்தல்.

    என்ன உழைப்பு

    என்ன உழைப்பு

    இந்த 15 தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டால், எடியூரப்பா அவரின் விருப்பப்படி செயல்படலாம். இல்லையென்றால் நாங்கள் சொல்வதைதான் எடியூரப்பா கேட்க வேண்டும் என்று பாஜக தேசிய தலைமை வெளிப்படையாக கூறிவிட்டது.இதனால்தான் சட்டசபை இடைத்தேர்தலில் எடியூரப்பா மிக தீவிரமாக உழைத்தார்.

    வெற்றி பெற்றார்

    வெற்றி பெற்றார்

    தற்போது அமித் ஷா வைத்த டெஸ்டில் எடியூரப்பா வெற்றிபெற்றுவிட்டார். பெரும்பான்மைக்கு தேவையான 7 தொகுதிகளை விட 4 தொகுதிகளை பாஜக கூடுதலாக வெல்லும் நிலைக்கு சென்றுள்ளது . இதன் மூலம் கட்சியை மொத்தமாக எடியூரப்பா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இருக்கிறார்.

    மெஜாரிட்டி

    மெஜாரிட்டி

    கர்நாடகாவில் பாஜக கட்சி முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க உள்ளதால், அந்த கட்சிக்குள் நிலவி வந்த அனைத்து விதமான பூசல்களும் சரியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக கர்நாடகாவில் எடியூரப்பா மீண்டும் மிக முக்கியமான தலைவராக உருவெடுக்க உள்ளார். இதற்கு அமித் ஷாவும் கிரீன் சிக்னல் கொடுப்பார் என்றுதான் கூறுகிறார்கள்.

    English summary
    Karnataka: By-elections win gives power to Yeddyurappa in the state Party.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X