பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடகாவில் ஒரு தொகுதியில் மட்டும் சுயேட்சை வெற்றி.. யார் இந்த சரத் பச்சே கவுடா?

Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகள்.. இன்று வாக்கு எண்ணிக்கை

    பெங்களூரு: கர்நடாகவில் 15 தொகுதிகள் இடைத்தேர்தலில் ஹோஸ்கோட் என்ற தொகுதியில் மட்டும் சுயேட்சை வேட்பாளர் சரத் பச்சே கவுடா வெற்றி பெற்றார். பாஜகவைச் சேர்ந்தவரான இவர் அதிருப்தி அடைந்த சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    கர்நாடகாவில் அத்தானி, காக்வாட், கோகாக், எல்லாபுரா ஹிரேகேரூர், ரானிபென்னூர், விஜயநகரா, சிக்பளாப்பூர், கே.ஆர்.புரம், யஷ்வந்த்பூர், மகாலாட்சுமி லேஅவுட் சிவாஜி நகர், ஹோஸ்கோட், கே.ஆர்.பேட், ஹுன்சூர் ஆகிய 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.

    இதில் சிவாஜிநகர், கேஆர் புரம் ஆகிய தொகுதிகளை தவிர மற்ற 13 தொகுதிகளிலும் பாஜக காங்கிரஸ் மற்றும் ஜேடியூவில் இருந்த அதிருப்தி எம்எல்ஏக்களை களம் இறக்கியது.

    அதிருப்தி

    அதிருப்தி

    இந்நிலையில் ஹோஸ்கோட் தொகுதியில் சீட் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த பாஜக எம்பி பச்சே கௌடாவின் மகன் சரத் பச்சே கவுடாவுக்கு பாஜக தலைமை சீட் கொடுக்கவில்லை. அவருக்கு பதில் காங்கிரஸ் ஜேடியு கூட்டணியில் இருந்து அதிருப்தியில் வந்த எம்டிபி நாகராஜ்க்கு சீட் கொடுத்தது.

    சரத் பச்சே கவுடா

    சரத் பச்சே கவுடா

    சரத் பச்சே கவுடா இதனால் அதிருப்தி அடைந்த சரத் பச்சே கவுடா ஹோஸ்கோட் தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்கினார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இதனிடையே மீண்டும் அவர் பாஜகவில் இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 12 இடங்களில் எடியூரப்பா ஆட்சியை மீண்டும் தக்கவைத்துள்ளார். காங்கிரஸ் 2இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. ஜேடிஎஸ் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.

    பாஜக 2007ல் வெற்றி

    பாஜக 2007ல் வெற்றி

    பெங்களூரு ஊரகப்பகுதி மாவட்டத்தில் உள்ள ஹோஸ்கோட் தொகுதியில் காங்கிரஸ் கட்சி கடந்த 2018ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இருந்தது. 2013ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி தான் ஹோஸ்கோட் தொகுதியில் வெற்றி பெற்று இருந்தது. ஆனால் அதற்கு முன்பாக அதாவது 2008ம் ஆண்டு நடந்த தேர்தலில் மட்டும் பாஜக வெற்றி பெற்றது.

    காங்கிரஸ் 2

    காங்கிரஸ் 2

    தற்போதைய நிலவரப்படி, பாஜக 10 இடங்களிலும், காங்கிரஸ் இரண்டு இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் இரண்டுஇடங்களிலும், சுயேட்சை (சரத் பச்சே கவுடா) ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.

    English summary
    Karnataka Bypoll Results 2019 Independent Candidate Sharath Bachegowda Leads in Hosakote. He is a BJP rebel candidate and son of BJP MP B N Bache Gowda.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X