பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடகாவில் அற்புதம் நிகழ்த்திய எடியூரப்பா.. 12 இடங்களில் பாஜக வெற்றி.. காங்.. ஜேடிஎஸ் பரிதாபம்

Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகள்.. இன்று வாக்கு எண்ணிக்கை

    பெங்களூரு: கர்நாடகாவில் நடந்து முடிந்த 15 தொகுதி இடைத்தேர்தலில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு 12 இடங்களில் பெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.

    17 பேர் ராஜினாமா செய்ததால் காங்கிரஸ், மஜத கூட்டணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவிழ்ந்தது.. கட்சி தாவல் தடைச்சட்டத்தின் கீழ் 17 பேரையும் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் 17 பேரும் உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில் . இவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமடன்றம், தகுதி நீக்கம் செல்லும் என்றும், 17 பேரும் இடைத்தேர்தலில் போட்டியிடத் தடையில்லை என்றும் தீர்ப்பில் தெரிவித்தது.

    இடைத்தேர்தல்

    இடைத்தேர்தல்

    இந்த 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அன்றைய தினம் 68 சதவீத வாக்குகளும் பதிவாகின.. அதாவது பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர், ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கி என்ற 2 தொகுதிகளை தவிர்த்து மீதமுள்ள 15தொகுதிகளுக்கு இந்த இடைத்தேர்தல் நடந்தது.

    சிவாஜி நகர்

    சிவாஜி நகர்

    அதாவது அத்தானி, காக்வாட், கோகாக், எல்லாபுரா ஹிரேகேரூர், ரானிபென்னூர், விஜயநகரா, சிக்பளாப்பூர், கே.ஆர்.புரம், யஷ்வந்த்பூர், மகாலாட்சுமி லேஅவுட் சிவாஜி நகர், ஹொசபேட், கே.ஆர்.பேட், ஹுன்சூர் ஆகிய 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.

    மீண்டும் போட்டி

    மீண்டும் போட்டி

    இதில் சிவாஜிநகர், கேஆர் புரம் உள்ளிட்ட 15 தொகுதிகளில் 13-ல் தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு பாஜக வாய்ப்பு வழங்கியது. ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், மஜத என்ற 3 பிரதான கட்சிகளுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. ஒட்டுமொத்தமாக 165 வேட்பாளர்கள் இதில் போட்டியிட்டுள்ளனர். இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் . 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    பாஜகவுக்கு சாதகம்

    பாஜகவுக்கு சாதகம்

    வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஆரம்பமே பாஜகவுக்கு சாதகமாக இருந்தது . எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு சிக்பல்லாபூர், யஷ்வந்த்பூர் உள்ளிட்ட 10 இடங்களில் முன்னிலை வகித்தது. அதன்பிறகு 9 இடங்களில் மட்டும் முன்னிலை வகித்தது. 4வது சுற்று வாக்குகள் முடிவில் காங்கிரஸ் மூன்று இடத்திலும், மதசார்பற்றஜனதா தளம் இரண்டு இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. சுயேட்சை வேட்பாளர் சரத் பச்சே கவுடா ஹோஸ்கோட் தொகுதியில் முன்னிலை வகித்தனர்.

    மாறியது முடிவுகள்

    மாறியது முடிவுகள்

    ஆனால் அதன்பிறகான சுற்று முடிவுகள் எல்லாமே பாஜகவுக்கு சாதகமாறின. கடைசியில் பாஜக 12 இடங்களில் முன்னிலைக்கு வந்தது. காங்கிரஸ் இரண்டு இடங்களிலும், சுயேட்சை ஒரு இடத்திலும் முன்னிலை வகித்தனர்.

    12ல் வெற்றி

    12ல் வெற்றி

    இரண்டு இடத்தில் முன்னிலையில் இருந்த மதசார்பற்ற ஜனதா தளம் கடைசியில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதேநேரம் பாஜக 12 இடங்களில் வெற்ற பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி இரண்டு இடத்திலும், சுயேட்சை வேட்பாளர் சரத் குமார் பச்சே கவுடா ஹோசாகோட் தொகுதியில் வெற்றி பெற்றனர்.

    பாஜக ஆட்சி தக்கவைப்பு

    பாஜக ஆட்சி தக்கவைப்பு

    அத்தானி, யெல்லாப்பூர், காக்வாட், சிக்கபல்லாப்பூர், கிருஷ்ணராஜபுரா, ஹிரேகூர், ரானேபென்னூர், கிருஷ்ணராஜ்பூர், மகாலட்சுமி லேஅவுட் மற்றும் கோகாக் உள்பட 12 தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி சிவாஜி நகர் மற்றும் ஹன்ஸ்பூரில் வென்றுள்ளன. சுயேட்சை வேட்பாளர் ரத் குமார் பச்சே கவுடா ஹோசாகோட் தொகுதியில் வெற்றி பெற்றார். 12 இடங்களில் வென்றால் பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது. பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். எடியூரப்பா மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

    English summary
    karnataka bypoll results 2019 diclared today, will Yeddyurappa government survive?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X