பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

100 ரவுடிகள் நேரில் ஆஜர்.. வாலை சுருட்ட வேண்டும்.. வார்னிங் செய்த பெங்களூர் போலீஸ் கமிஷனர்

Google Oneindia Tamil News

பெங்களூர்: "கொஞ்ச நாளைக்காவது நீங்கள் வாலை சுருட்டிக்கொண்டு இருந்தாக வேண்டும்" என்று சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ரவுடிகளை நேரில் அழைத்து பெங்களூர் துணை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடகாவில் 15 சட்டசபைத் தொகுதிகளுக்கு டிசம்பர் 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் பிரச்சாரங்கள் ஒரு பக்கம் சூடுபிடித்துள்ள நிலையில், மற்றொரு பக்கம் காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பணிகளில் இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.

Karnataka bypolls: Bangalore police warns Rowdy sheeters

பெங்களூரை பொருத்தளவில், கே.ஆர்.புரம், சிவாஜி நகர், யஸ்வந்த்பூர் மற்றும் மகாலட்சுமி லேஅவுட், ஆகிய 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், கேஆர்.புரம், தொகுதி, பெங்களூர் காவல்துறையின் கிழக்கு மண்டல கட்டுப்பாட்டில் வருகிறது.

கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா, இந்த மண்டலத்தில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ரவுடிகளுக்கு சம்மன் அனுப்பி அவர்களை நேரில் வர வைத்துள்ளார். இடைத்தேர்தலை முன்னிட்டு எந்த ஒரு சட்ட விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட கூடாது, அவ்வாறு ஈடுபட்டால் கடும் நடவடிக்கை பாயும் என்று எச்சரித்து அனுப்பி உள்ளார்.

அதேபோல, வடக்கு மண்டலத்திலுள்ள, யஸ்வந்த்பூர் இடைத்தேர்தலை முன்னிட்டு, பெங்களூரு தெற்கு மண்டல காவல்துறை தலகாட்புரா தொகுதியில் ரவுடிகளின் கூட்டத்தை நடத்தி எச்சரிக்கை செய்து அனுப்பி உள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

மேலும் கேஆர்புரம் தொகுதிக்கு உட்பட்ட ராமமூர்த்தி நகர், பானசவாடி, கேஜி ஹள்ளி, டிஜி ஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ரவுடி பட்டியலில் உள்ளோரின் வீடுகளுக்கு காவல்துறையினர் அதிகாலையில் சென்று அங்கு பயங்கர ஆயுதங்கள் ஏதேனும் ஒளித்து வைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக சோதனை நடத்தினர். தேர்தலையொட்டி இந்த தொகுதிகளில் ஏற்கனவே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது

English summary
K.R.Puram, Mahalakshmi Layout, Yeshwanthpur and Shivajinagar is on alert as these constituencies in Bangalore, will face by polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X