பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செம கிளிக்.. மோடி எங்கே போனாலும்.. பின்னாடியே போவாரே அவர்.. ஞாபகம் இருக்கா.. அவர் இவர்தான்

கேமராமேன் கிருஷ்ணமூர்த்தி லோக்நாத் பிரபலமாகிவிட்டார்

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடி எங்கே போனாலும்.. பின்னாடியே போவாரே அவர்.. ஞாபகம் இருக்கா..!

    பெங்களூரு: பிரதமர் மோடி எங்கே போனாலும் ஒருவர் அவரை விடாமல் போட்டோ பிடிப்பார்.. அவரைப் பார்த்திருக்கீங்களா.. இப்போது அவரும் பிரபலமாகி விட்டார். அவர் கர்நாடகத்துக்காரர். பெயர் எட்லம் கிருஷ்ணமூர்த்தி லோக்நாத்.

    லோக்நாத் வேறு யாருமில்லை, பிரசார் பாரதி புகைப்படக்காரர். இவர்தான் பிரதமரின் நிகழ்ச்சிகளை கூடவே இருந்து படம் பிடிப்பா்ர. பிரதமர் எங்கு சென்றாலும் அங்கு இவரையும் கூடவே பார்க்கலாம்.

    karnataka cameraman is the man behind pm modi

    கிட்டத்தட்ட பிரதமர் நரேந்திர மோடியின் நிழல் போல வலம் வருபவர் இந்த லோக்நாத். அது உள்ளூராக இருந்தாலும் சரி வெளிநாடாக இருந்தாலும் சரி லோக்நாத்தான் கூடவே இருப்பார்.

    லோக்நாத் பிரதமரின் அதிகாரப்பூர்வ புகைப்படக் கலைஞர் மட்டுமல்ல வீடியோகிராபரும் கூட. தலைவர்களுடன் பிரதமர் பேசுவது, சந்திப்பது, பொதுக் கூட்டங்களில் பேசுவது என்று பிரதமர் பங்கேற்கும் ஒவ்வொரு நிகழ்வையும் நிழற்படமாக்கி, வீடியோவில் கிளிக்கிடும் மிகப் பெரிய பொறுப்பை வகிக்கிறார் லோக்நாத்.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ஆளுமை விருது... குவியும் பாராட்டுக்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ஆளுமை விருது... குவியும் பாராட்டுக்கள்

    இவரது திறமையை தெரிந்து கொள்ள வேண்டுமானால் பிரதமரின் விதம் விதமான ஸ்டில்களைப் பார்த்தாலே தெரியும். அப்படி ஒரு அட்டகாசமான புகைப்படங்களைக் கொடுத்தவர் இந்த லோக்நாத்தான். இந்த லோக்நாத்தின் சொந்த ஊர் கர்நாடக மாநிலம், தும்மகூரு மாவட்டம் பவகதா தாலுகாவைச் சேர்ந்த ஒபலாபுரா என்பதாகும்.

    karnataka cameraman is the man behind pm modi

    பிரதமர் அலுவலகத்தில் இவர் கடந்த 20 வருடமாக முதன்மை புகைப்படக் கலைஞராக பணியாற்றி வருகிறாராம். கடந்த ஆறு வருடமாக பிரதமரை நிழற்படமாக பதிவு செய்து வருகிறார். அடிக்கடி பிரதமர் வெளிநாடு போவதால் லோக்நாத்தும் செம பிசியான மனிதராகவே இருக்கிறார். இதில் அவருக்கு நிறைய அனுபவங்களும் உள்ளன.

    இப்படித்தான் பிரதமரின் சுவிட்சர்லாந்து பயணத்தின்போது மைனஸ் 15 டிகிரி வெப்ப நிலையில் கடும் குளிரில் நடுங்கியபடி பிரதமரை படம் எடுத்துள்ளார். பிரதமரும் சளைக்காமல் போஸ் கொடுத்து லோக்நாத்தை ஆச்சரியப்படுத்தினாராம். கிட்டத்தட்ட 40 நாடுகளுக்கு நான் பிரதமருடன் பயணித்துள்ளேன். இதை சாதனையாக கருதுகிறேன் என்று பெருமையுடன் சொல்கிறார் லோக்நாத்.

    மாவட்ட கவுன்சிலர்களை தட்டி தூக்கிய திமுக.. ஒன்றிய கவுன்சிலர்களை அள்ளிய அதிமுக.. தேர்தலில் டிவிஸ்ட் மாவட்ட கவுன்சிலர்களை தட்டி தூக்கிய திமுக.. ஒன்றிய கவுன்சிலர்களை அள்ளிய அதிமுக.. தேர்தலில் டிவிஸ்ட்

    பிரதமர் மோடி மட்டுமல்ல, அப்துல் கலாமின் புகைப்படக் கலைஞராகவும் இருந்துள்ளார் லோக்நாத். இவரது மாமா பெங்களூரில் முன்பு கலர் லேப் வைத்திருந்தார். அங்கு அடிக்கடி வந்தபோதுதான் புகைப்படக் கலை மீது இவருக்கு ஆர்வம் பிறந்தது.. பிறகு போட்டோஸ் எடுக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் பியூசி முடித்து விட்டு புகைப்படக் கலையில் பட்டயப் படிப்பை முடித்தார். அப்படியே பிரதமர் அலுவலகத்திலும் வேலை கிடைக்கவே.. இன்று இவரும் ஒரு வரலாற்று சாதனையாளராக மாறி நிற்கிறார்.

    English summary
    karnataka cameraman krishnamoorthy loknath is the man behind pm modi around the world
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X