பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி.. மருத்துவமனையில் அனுமதி

Google Oneindia Tamil News

பெங்களூரு: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தொடர்ந்து, பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான, கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Recommended Video

    கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கும் கொரோனா பாதிப்பு

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தான் இன்று பிற்பகல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதை ட்விட்டரில் உறுதி செய்தார். அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தன்னை சமீபத்தில் தொடர்பு கொண்ட அனைவரும் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

    Karnataka Chief Minister BS Yediyurappa tested positive for for the novel coronavirus

    இந்நிலையில் கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், கொரோனா பாதித்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை எடியூரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கொரோனா உறுதி.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி!மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கொரோனா உறுதி.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி!

    Karnataka Chief Minister BS Yediyurappa tested positive for for the novel coronavirus

    இது தொடர்பாக கர்நாடகா முதல்வர் பிஎஸ் எடியூரப்பா வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், "நான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். நான் நன்றாக இருக்கிறேன், எனினும், மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். சமீபத்தில் என்னை தொடர்பு கொண்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அத்துடன் சுயமாக தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

    English summary
    "I have tested positive for coronavirus. Whilst I am fine, I am being hospitalised as a precaution on the recommendation of doctors. I request those who have come in contact with me recently to be observant and exercise self-quarantine," Karnataka Chief Minister BS Yediyurappa tweeted.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X