பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உச்சநீதிமன்ற தீர்ப்பால் பீதியில் குமாரசாமி.. பேச்சே வரவில்லை!

Google Oneindia Tamil News

பெங்களூர்: அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால் கர்நாடக முதல்வர் குமாரசாமி கடும் பீதியிலும், அப்செட்டிலும் உள்ளார்.

அதிருப்தி எம்எல்ஏக்களை கட்டாயப்படுத்தி சட்டசபை வரவைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. எனவே கொறடா உத்தரவை பிறப்பித்து, அவர்களை அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்யலாம் என்று திட்டமிட்டிருந்த ஆளும் கட்சியின் பிளான் தவிடுபொடியாகியுள்ளது.

Karnataka CM HD Kumaraswamy declines to comment

அதிருப்தி எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வராவிட்டால், குமாரசாமி அரசு பெரும்பான்மை இன்றி கலைவது உறுதியாகிவிடும். இந்த நிலையில்தான், பாஜக தலைவர் எடியூரப்பா அளித்த பேட்டியில், உச்சநீதிமன்ற உத்தரவால், ஜனநாயகம் காக்கப்பட்டுள்ளது என்றார். ஆனால், பெங்களூரில், முதல்வர் குமாரசாமியை சந்தித்த நிருபர்கள் அவர் கருத்தை கேட்டறிய முயன்றனர்.

நிருபர்கள், தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு கேட்டபோதிலும், குமாரசாமி கைகளை மட்டும் காட்டிவிட்டு காரில் ஏறி சென்றுவிட்டார். அவர் அப்செட்டாக இருப்பது முகத்தில் பிரதிபலித்ததை கவனிக்க முடிந்தது.

கர்நாடக சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. குமாரசாமி ஆட்சி கவிழுமா?.. தப்புமா? கர்நாடக சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. குமாரசாமி ஆட்சி கவிழுமா?.. தப்புமா?

முன்னதாக எடியூரப்பா இன்று காலை, பெங்களூரிலுள்ள சிவன் கோவிலில் ருத்ரஹோமம் சிறப்பு யாகம் நடத்தி வழிபட்டார். குமாரசாமி, பெங்களூர் சாரதாபீடத்தில், சிறப்பு வழிபாடுகளை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Karnataka CM HD Kumaraswamy declines to comment, when asked about Supreme Court's verdict on Karnataka rebel MLAs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X