பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நமக்கே நேரம் சரியில்லை.. டெல்லிக்குப் போகும் திட்டத்தை கேன்சல் செய்த குமாரசாமி!

டெல்லி பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார் குமாரசாமி

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடக முதல்வர் குமாரசாமி தனது இன்றைய டெல்லி பயணத்தை திடீரென ரத்து செய்திருக்கிறார். எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளவிருந்த நிலையில் தற்போது இந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகத்தில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றினாலும், பாஜக வந்துவிடக்கூடாது என்பதற்காக மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து அந்த கட்சியின் தலைவர் குமாரசாமி முதல்வரானார்.

ஆனாலும் இரு கட்சிகளுக்குள் பனிப்போர் நீண்டு வந்தது. ஒரு கட்டத்தில் இரு கட்சிகளுக்கும் விரிசலும் எழுந்தது. இதனால் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் தொண்டர்கள் வலுவான குரல் எழுப்பி வருகின்றனர்.

அதிமுக இரண்டாக பிரிந்தது அனைவருக்கும் சாதகமாகி விட்டது... சொல்கிறார் கருணாஸ் அதிமுக இரண்டாக பிரிந்தது அனைவருக்கும் சாதகமாகி விட்டது... சொல்கிறார் கருணாஸ்

திடீர் ரத்து

திடீர் ரத்து

இதனால் குமாரசாமியின் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில்தான், இன்றைய டெல்லி பயணத்தை குமாரசாமி திடீரென ரத்து செய்துள்ளார்.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

நேற்று முன்தினம், பாஜகதான் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் வெளிவந்தன. இதனால் டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் திரண்டு முக்கிய ஆலோசனை நடத்த திட்டமிட்டன. இந்த ஆலோசனை முடிந்தவுடன், அகமது படேல், சரத் பவார், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகள் தலைவர்கள் திரண்டு தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திப்பது என முடிவானது.

ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

அப்போது விவிபாட் ஸ்லிப், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் சரியான எண்ணிக்கையில் பொருந்துகிறதா என்பதை பார்க்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும் முடிவு செய்யப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் குமாரசாமியும் இடம்பெறுவதாக இருந்தது.

அதிர்வலை

அதிர்வலை

ஆனால் இப்போது கர்நாடக மாநில ஆட்சியில் ஏகப்பட்ட குழப்பங்கள் வெடித்து வருவதால், பயணத்தை குமார சாமி ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகள் திரண்டு வரும் நிலையில் குமாரசாமி தனது டெல்லி பயணத்தை ரத்து செய்திருப்பது அரசியலில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Karnataka CM HD Kumaraswamy has canceled the trip to Delhi today due to local Politics
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X