பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எடியூரப்பா சாபம் சும்மா விடுமா குமாரசாமியை.. கர்நாடகாவில் திடீர் திருப்பம்

Google Oneindia Tamil News

Recommended Video

    கலங்கி நிற்கும் குமாரசாமி...கர்நாடகாவில் திடீர் திருப்பம்

    பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அன்றைக்கு எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமலேயே பதவி விலகினார். இப்போது குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமலேயே பதவி விலக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    கர்நாடக மாநிலத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

    இந்த பேச்சுவார்த்தையின் மூலம் 2 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யும் முடிவினை மாற்றிக்கொண்டு காங்கரசில் நீடிக்க முடிவு செய்துள்ளார்கள். இதேபோல் மற்ற எம்எம்எல்ஏக்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொள்வார்களா என்பது குறித்து எதிர்பார்ப்பு நிலவுகிறது. அப்படி நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக குறைவு என கூறப்படுகிறது.

    சசிகலாவுக்கு வந்த சோதனையை பாருங்க.. முதல்வர் கனவுதான் கலைந்தது.. இதற்கு கூட அவருக்கு உரிமையில்லையா? சசிகலாவுக்கு வந்த சோதனையை பாருங்க.. முதல்வர் கனவுதான் கலைந்தது.. இதற்கு கூட அவருக்கு உரிமையில்லையா?

    திடீர் திருப்பம்

    திடீர் திருப்பம்

    முன்னதாக கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 224 இடங்களில் பாஜக 105 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் திடீர் திருப்பமாக எதிர் எதிர் துருவமாக இருந்த மதசார்பற்ற ஜனதா தளமும் (37), காங்கிரஸ் கட்சியும் (80) தேர்தலுக்கு பின் கூட்டணி அமைத்து பாஜக ஆட்சிக்கு வருவதை தடுத்தன.

    உருக்கமாக பேசினார்

    உருக்கமாக பேசினார்

    இதனால் ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்ததும் முதல்வராக பதவியற்ற எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமலேயே சட்டசபையில் உருக்கமாக பேசிவிட்டு பதவி விலகினார். காங்கிரஸ் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவி ஏற்றார்

    ராஜினாமா செய்ய வாய்ப்பு

    ராஜினாமா செய்ய வாய்ப்பு

    இந்நிலையில் எடியூரப்பாவுக்கு அன்று உருவான சூழலில் தான் இப்போது குமாரசாமியும் இருக்கிறார். ஏனெனில் அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேரில் 2 பேரைத்தான் இதுவரை காங்கிரஸ் சமாதானம் செய்துள்ளது. மற்ற எம்எல்ஏக்கள் முடிவினை மாற்றிக்கொள்வதாக இல்லை. புதன்கிழமைக்குள் எல்லா அதிருப்தி எம்எல்ஏக்களையும் சமாதனப்படுத்த முடியவில்லை என்றால் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமலேயே தனது பதவியை ராஜினாமா செய்யும் திட்டத்தை குமாரசாமி அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    உச்சநீதிமன்றம் விசாரணை

    உச்சநீதிமன்றம் விசாரணை

    தற்போது உள்ள சூழலில் 10 அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அப்போது உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவே புதன்கிழமைக்கான நம்பிக்கை வாக்கெடுப்பை தீர்மானிக்க போகிறது.

    English summary
    IF congress leaders can not make peace Rebel MLAs, Karnataka CM kumaraswamy may resign like yeddyurappa in assembly
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X