பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெலகாவியில் ஒரு இன்ச் நிலம் கூட விட்டுக் கொடுக்க முடியாது.. உத்தவ் தாக்கரேவுக்கு எடியூரப்பா பதில்

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெலகாவியிலிருந்து ஒரு இன்ச் நிலத்தை கூட விட்டுக் கொடுக்க முடியாது என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகம்- மகாராஷ்டிரா மாநில எல்லையில் பெலகாவி மாவட்டம் அமைந்துள்ளது. மொழி அடிப்படையில் அந்த மாவட்டம் சேர்ந்தது என மகாராஷ்டிரா சொந்தம் கொண்டாடி வருகிறது

இதனால் பெலகாவி யாருக்கு சொந்தம் என்பதில் இரு மாநிலங்களுக்கிடையேயும் பிரச்சினை நிலவி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையில் புதிய ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தில் உள்ள பெலகாவி மகாராஷ்டிராவுக்கு சொந்தமானது என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

ஒரு அங்குலம்

ஒரு அங்குலம்

இந்த நிலையில் உத்தவ் தாக்கரேவை கண்டித்து கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதுகுறித்து முதல்வர் எடியூரப்பா கூறுகையில் கர்நாடகத்தின் ஒரு அங்குலம் நிலம் கூட விட்டுக் கொடுக்க முடியாது.

எந்தெந்த பகுதிகள்

எந்தெந்த பகுதிகள்

இதுகுறித்து அவர் பெங்களூருவில் செய்தியாளர்கள் அளித்த பேட்டியில், மகாஜன் அறிக்கையில் கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு எந்தெந்த பகுதிகள் சேர வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டுவிட்டது.

பெலகாவி

பெலகாவி

அரசியல் ஆதாயத்துக்காக மகாராஷ்டிரா முதல்வர் பெலகாவி குறித்து பேசி இரு மாநில மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார். கன்னடர்களின் நலனை பாதுகாக்க எங்கள் அரசு தயாராக உள்ளது.

மொழி விஷயம்

மொழி விஷயம்

நிலம், நீர், மொழி விஷயங்களில் சமரசத்திற்கு இடமில்லை. இதில் யாருக்கும் சிறிதும் சந்தேகம் வேண்டாம். கன்னடர்களின் நலனை பலிகொடுத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்றார்.

English summary
Karnataka CM Yeddyurappa says that even 1 inch land will not be given to Maharastra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X