காங்கிரஸ் பணம் பறிக்கும் கட்சி.. பணம் இல்லாதவர்களுக்கு இடமில்லை.. சித்தராமையா 'மாஜி வலது கரம்' பகீர்
பெங்களூர்: காங்கிரஸ் பணம் பறிக்கும் கட்சியாக மாறிவிட்டதாக, காங்கிரஸில் இருந்து விலகிய கர்நாடக காங்கிரஸ் மேல்சபை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ள கர்நாடக மேல்சபை உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சி.எம்.இப்ராகிம், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிவிட்டார்.
கூட்டணியுடன் வரும் திராவிட கட்சிகள்! தனித்து களமிறக்கும் 5 முக்கிய கட்சிகள்-பரபரக்கும் தேர்தல் களம்
இப்ராஹிம் 1996ல் பிரதமர் தேவகவுடாவின் அமைச்சரவையில் மத்திய சுற்றுலா, விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர். 2008ல் ஆண்டு மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்.

இப்ராஹிம்
இப்போதும் அக்கட்சியின் குமாரசாமியுடன் தொடர்பில் அவர் இருந்து வருகிறார். எனவே மீண்டும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இப்ராகிம் இணைவார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என கூறினார். கர்நாடக மேல்சபை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எஸ்.ஆர்.பட்டீல் இருந்தார். இவரது பதவி காலம் முடிவடைந்தது. இதையடுத்துஅந்தப் பதவியை தனக்கு வழங்க வேண்டும் என்று இப்ராகிம் காங்கிரஸ் தலைவர்களிடம் கோரிக்கை வைத்தார்.

கர்நாடக மேல்சபை
இந்த நிலையில் மேல்-சபை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் ஹரிபிரசாத் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து இப்ராகிம் ''கர்நாடக மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்குமாறு கேட்டேன். ஆனால் அது கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் எனக்கு இருக்கும் உறவு முடிந்துவிட்டது. சங்கராந்திக்கு பிறகு எனக்கு நல்ல பரிசை காங்கிரஸ் மேலிடம் வழங்கியுள்ளது.

அழைப்பு
டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் என்னை தொடர்பு கொண்டு பேசினர். அதுகுறித்த ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. எல்லா தகவல்களையும் ஒரே நாளில் கூற மாட்டேன். இந்த தகவல்களை படிப்படியாக வெளியிடுவேன். இதன் தாக்கம் உத்தரபிரசே தேர்தலில் எதிரொலிக்கும். அந்த மாநில தேர்தல் பிரசாரத்திற்கு வரும்படி சமாஜ்வாடி கட்சி அழைத்துள்ளது. நான் அவ்வளவு பெரிய தலைவர் கிடையாது. ஆனால் முலாயம்சிங்குடன் பணியாற்றியுள்ளேன்.

விலகல்
காங்கிரசை விட்டு விலகுவது குறித்து 10 நாட்களில் அறிவிப்பேன். எனக்கு கடன்கள் உள்ளன. அதை சில சொத்துகளை விற்று அடைக்க திட்டமிட்டுள்ளேன். அதன் பிறகு சுதந்திரமாக எனது முடிவை எடுப்பேன். காங்கிரஸ் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறது. பணமில்லாமல் யாராலும் காங்கிரசில் பணியாற்ற முடியாது. இந்திரா காந்தி, நேரு போன்றோரின் காலகட்டத்தில் காங்கிரஸ், சோசலிஸ்ட் கட்சியாக இருந்தது, ஆனால் இப்போது பணம் பறிக்கும் கட்சியாக மாறியுள்ளது, கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் விரைவில் வீழ்த்தப்படும். காங்கிரஸ் கட்சி மூழ்கிவிட்டது. என்னைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் இனி முடிந்து போன ஒன்று.

ஜூனியர்
மேல் சபை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் பி.கே.ஹரிபிரசாத் ஒரு ஜூனியர். அவரின் கீழ் என்னால் எப்படி பணியாற்ற முடியும். தேவகவுடா போன்ற தலைவரை விட்டு, மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து சித்தராமையாவுக்காக விலகினேன். ஆனால் எனக்கு என்ன கைமாறு செய்திருக்கிறார் பார்த்தீர்களா. மாநில மக்களும், என் நலம்விரும்பிகளும், காங்கிரசுக்கு தகுந்த பதிலளிப்பார்கள் என இம்ராகிம் கூறினார்.