பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாட்டாமை செய்ய சித்தராமையா யார்...? கொந்தளிக்கும் காங்.நிர்வாகிகள்

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸில் சித்தராமையா நாட்டாமை செய்வதாகவும், அவருக்கு அடி பணிய வேண்டிய கட்டாயம் தங்களுக்கு இல்லை எனவும் முக்கிய நிர்வாகிகள் பலர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

கர்நாடக முன்னாள் முதல்வரும் , மூத்த காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா, தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் கட்சி நிர்வாகிகளின் அதிருப்தியை சம்பாதித்துள்ளார். குருபா சமுதாயத்தை சேர்ந்த இவர், அந்த சமுதாய மக்களிடையே அசைக்க முடியாத தலைவராக உள்ளார். இதனால் காங்கிரஸ் தலைமையும் சித்தராமையாவுக்கு கடிவாளம் ஏதும் போடாமல் அவர் போக்குக்கு செயல்பட அனுமதி அளித்துள்ளது.

karnataka congress leaders angry on siddaramaiah activities

கட்சித் தலைமை சித்தராமையாவுக்கு வழங்கிய சுதந்திரத்தை அவர் தவறாக பயன்படுத்துகிறார் என புகார் கூறுகின்றனர் காங்கிரஸ் முன்னணி நிர்வாகிகள். கே.எச்.முனியப்பா, ஹரிச் பிரசாத், போன்ற கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையாவை சர்வாதிகாரி என கட்சிக் கூட்டத்திலேயே கடுமையாக விமர்சித்துள்ளனர்.

"இந்தாங்க.. விக் வெச்சுக்குங்க"... தலைமுடியை தானம் செய்த அபர்ணா.. எழுந்து நின்று பாராட்டும் கேரளா!

இது தொடர்பாக கே.எச்.முனியப்பாவும், சித்தராமையாவும் இடையே நேரடியாக மோதலில் ஈடுபட்டது சோனியாகாந்தி வரை புகார் சென்றுள்ளது. சித்தராமையாவால் பாதிக்கப்பட்ட வீரப்ப மொய்லி, ஹரி பிரசாத், மல்லிகார்ஜுனே கார்கே, முனியப்பா, உள்ளிட்டோர் அடங்கிய குழு சித்தராமையாவை கட்சிப் பணிகளில் இருந்து சில காலம் ஒதுக்கி வைக்க வேண்டும் என தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளது.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கைப்பற்ற சித்த ராமையா தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் நேரத்தில், அவருக்கு எதிராக கட்சியினர் போர்க்கொடி உயர்த்தியிருப்பது அவரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

English summary
karnataka congress leaders angry on siddaramaya activitie
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X