பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆமாங்க.. காங் எம்எல்ஏக்களுக்கு சித்தராமையாதான் முதல்வர்.. சொன்னதில் என்ன தவறு?- துணை முதல்வர்

Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடகாவில் காங்கிரஸ் மதஜ கூட்டணிக்குள் மீண்டும் குழப்பம்- வீடியோ

    பெங்களூர்: காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு சித்தராமையாதானே முதல்வர். அது போல் சொன்னதில் என்ன தவறு என துணை முதல்வர் பரமேஸ்வரா கேள்வி எழுப்பியுள்ளார்.

    கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி சார்பில் மாநிலத்தில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இரு கட்சிகளுக்கும் இடையே அண்மைக்காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது.

    காங்கிரஸ் கட்சியினரின் செயல்பாடுகளால் கலங்கிய முதல்வர் குமாரசாமி அவ்வப்போது கண் கலங்கி தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்.

    எம்எல்ஏக்கள்

    எம்எல்ஏக்கள்

    இந்நிலையில் குமாரசாமி கூறுகையில் காங்கிரஸ் விரும்பினால் நான் முதல்வர் பதவியை துறக்க தயாராக உள்ளேன். சித்தராமையாதான் முதல்வர் என காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூறி வருகின்றனர்.

    கட்டுக்குள்

    கட்டுக்குள்

    காங்கிரஸ் எம்எல்ஏக்களின் செயல்பாடுகளை வேடிக்கை பார்க்கும் காங்கிரஸ் தனது எம்எல்ஏக்களை கட்டுக்குள் வைக்க வேண்டும் என குமாரசாமி கூறியுள்ளார்.

    தலைவர்

    தலைவர்

    இதற்கு பதிலடியாக துணை முதல்வர் பரமேஸ்வரா (காங்) கூறுகையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு சித்தராமையாதான் முதல்வர். அவர் எங்கள் தலைவர். அவரது கருத்தை கூறுவதில் என்ன தவறு

    நிலவிவருகிறது

    நிலவிவருகிறது

    கர்நாடக முதல்வராக குமாரசாமி தொடர்வதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. ஆனால் எங்களை பொருத்தவரை சிறந்த முதல்வர் குமாரசாமி ஆவார் என்று பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். என்னதான் காங்கிரஸ் பூசி மெழுகினாலும் அதிக இடங்களை பெற்றும் முதல்வர் பதவியை மஜதவுக்கு விட்டுக் கொடுத்ததில் அதிருப்தி நிலவி வருவது தெரிய வருகிறது.

    English summary
    Karnataka Deputy Chief Minister G Parameshwara downplayed the issue. Reacting to the issue, he said there was nothing wrong with the concerned MLAs expressing their opinions, but the party considers Kumaraswamy as the best Chief Minister.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X