பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா உறுதி.. மருத்துவமனையில் அனுமதி

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 18 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளார்கள். கர்நாடகாவில் இதுவரை 1.39 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் இதுவரை 62 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.

Karnataka EX CM Siddaramaiah tested corona positive

கர்நாடகாவில் பலியானோர் எண்ணிக்கை 2594 ஆகும். இந்த நிலையில் நேற்றைய தினம் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்த நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்டிங் எல்லாம் ஓகே.. இதில்தான் பின்தங்கிவிட்டோம்.. மோசமாகும் கொரோனா டெஸ்டிங் எல்லாம் ஓகே.. இதில்தான் பின்தங்கிவிட்டோம்.. மோசமாகும் கொரோனா "டிடிபி ரேட்".. ஷாக் டேட்டா!

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் எனக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. நான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

Karnataka EX CM Siddaramaiah tested corona positive

என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா என பார்த்து பரிசோதனை செய்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன். மேலும் அவர்கள் வீடுகளில் அவர்களது குடும்பத்தாரிடம் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்துகிறேன் என்று ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கும் கொரோனா பாதிப்பு

    English summary
    Karnataka EX CM Siddaramaiah tested corona positive and he requested all those who had come in contact with him to check out for symptoms.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X