பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குமாரசாமி பதவி விலக மாட்டார்.. ஆளுநரை சந்திக்கும் திட்டமில்லை.. கர்நாடக முதல்வர் அலுவலகம் மறுப்பு!

கர்நாடக முதல்வர் குமாரசாமி இன்று அம்மாநில ஆளுநரை சந்தித்து பதவி விலகல் கடிதம் அளிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Karnataka Floor Test : DK Shivakumar : அமித்ஷாவுக்கே சிம்ம சொப்பனமாக இருக்கும் டி.கே சிவக்குமார்

    பெங்களூர்: கர்நாடக முதல்வர் குமாரசாமி இன்று அம்மாநில ஆளுநரை சந்தித்து பதவி விலகுவதாக வெளியான செய்திகளுக்கு முதல்வர் அலுவலகம் மறுப்பு தெரிவித்து உள்ளது.

    கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சியை நீடிப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

    பெரும்பாலும் கர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதில் அம்மாநில சபாநாயகர் ரமேஷ் குமார் உறுதியாக இருக்கிறார்.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 13 பேர் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் 3 பேர் பதவி விலகியதை அடுத்து அம்மாநில அரசு கவிழும் நிலைக்கு சென்றது. கர்நாடக சட்டசபையின் பலம் 225. இங்கு பெரும்பான்மை பெற 113 எம்எல்ஏக்கள் தேவை. இப்போது காங்கிரஸ் - மஜதவில் இருந்து 16 பேர் ராஜினாமா செய்துள்ளதால், அந்த கூட்டணி பெரும்பான்மையை இழந்து இருக்கிறது. காங்கிரஸ் - மஜத கூட்டணி பலம் 102 ஆக குறைந்துள்ளது.

    நம்பிக்கை வாக்கெடுப்பு

    நம்பிக்கை வாக்கெடுப்பு

    இதையடுத்து கடந்த வியாழக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தாமாக முன்வந்து குமாரசாமி கடிதம் அனுப்பினார். ஆனாலும் இப்போது வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விடமால் குமாரசாமி காலம் தாழ்த்தி வருகிறார். இன்று கூட சட்டசபையில் அவர் இரண்டு நாட்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அவகாசம் வேண்டும் என்று கூறினார்.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதில் அம்மாநில சபாநாயகர் ரமேஷ் குமார் உறுதியாக இருக்கிறார். இதனால் கர்நாடகாவில் இன்று மாலை 7 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து கர்நாடக முதல்வர் குமாரசாமி இன்று அம்மாநில ஆளுநரை சந்தித்து பதவி விலகல் கடிதம் அளிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்தது.

    ஏன் அப்படி

    ஏன் அப்படி

    நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன் அம்மாநில ஆளுநர் வாஜுபாய் வாலாவை சந்தித்து குமாரசாமி பதவி விலகல் கடிதம் அளிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்தது. இதற்காக குமாரசாமி ஆளுனரிடம் நேரம் கேட்டு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இது தொடர்பாக வெளியான செய்திகளுக்கு முதல்வர் அலுவலகம் மறுப்பு தெரிவித்து உள்ளது. குமாரசாமி பதவி விலகும் திட்டத்தில் இல்லை என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    ஆனால் வாய்ப்பில்லை

    ஆனால் வாய்ப்பில்லை

    ஆளுநரை சந்தித்து குமாரசாமி கூடுதல் நேரம் கேட்க வாய்ப்புள்ளது. அவர் பதவி விலக மாட்டார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடுதலாக இரண்டு நாட்கள் அவர் கேட்க வாய்ப்புள்ளது, கண்டிப்பாக பதவி,விலக மாட்டார் என்றும் மஜத தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Karnataka Floor Test: CM Kumaraswamy won't resign today evening says CM office
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X