பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜ்பவன் சென்றார் குமாரசாமி.. முதல்வர் பதவியை ராஜினாமா செய்து ஆளுநரிடம் கடிதம்

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் இன்று மாலை 6 மணிக்குள் குமாரசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை, நம்பிக்கையில்லா தீர்மானத்தை சட்டசபையில் தாக்கல் செய்தார் குமாரசாமி. 15 எம்எல்ஏக்கள் பலம் குறைவாக உள்ள நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளிப்போட்டுக் கொண்டே வருகிறது ஆளும்தரப்பு.

ஆனால் ஆளுநர் ஒருபக்கம், உச்சநீதிமன்றம் மறுபக்கம் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சபாநாயகர் ரமேஷ்குமார் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதையடுத்து நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம், இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இது தொடர்பான உடனடி அப்டேட்களை இந்த live பக்கத்தில் இணைந்திருங்கள்.

Newest First Oldest First
7:37 PM, 23 Jul

நம்பிக்கை தீர்மானம் மீது வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சில நிமிடங்களில் முடிவு அறிவிக்கப்படுகிறது.
7:20 PM, 23 Jul

அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களை நாங்கள் திரும்ப சேர்க்க மாட்டோம்- சித்தராமையா அறிவிப்பு. சட்டசபையில் அறிவித்தார் சித்தராமையா. பிரளயமே வந்தாலும் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு காங்கிரசில் இடம் இல்லை. அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு திரிசங்கு சொர்க்கம் போன்ற நிலை உருவாகப்போகிறது .
6:34 PM, 23 Jul

சட்டைப் பையில் ராஜினாமா கடிதம் வைத்துள்ளேன்- கர்நாடக சபாநாயகர் ஆவேசம்; ராஜினாமா கடிதத்தை எடியூரப்பாவிடம் கொடுத்தனுப்பி படிக்க கொடுத்த சபாநாயகர்; சட்டசபை நடவடிக்கையை சரியாக நடத்த முடியாவிட்டால் ராஜினாமா செய்ய தயாராக வந்துள்ளேன்
6:27 PM, 23 Jul

வாக்கெடுப்புக்கு முன்பாக ராஜினாமா செய்து ஓட மாட்டேன்- குமாரசாமி பேச்சு; சட்டசபையில் வாக்கெடுப்பு நடந்தே தீர வேண்டும்
5:56 PM, 23 Jul

மகிழ்ச்சியாக முதல்வர் பதவியை துறக்க தயாராக உள்ளேன்- குமாரசாமி பேச்சு; எனக்கு கொஞ்சம் கூட கவலை இல்லை- குமாரசாமி
5:45 PM, 23 Jul

பெங்களூர் நகரம் முழுக்க 144 தடை உத்தரவு: கமிஷனர் அலோக் குமார் அறிவிப்பு; இன்று மாலை 6 மணி முதல் 25ம் தேதி மாலை 6 மணி வரை தடையுத்தரவு
5:31 PM, 23 Jul

கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீதான விவாதம் முடிவடைந்தது; விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் குமாரசாமி உரை ஆரம்பம்
4:59 PM, 23 Jul

கர்நாடகாவில் பரபரப்பு: சுயேச்சை எம்எல்ஏக்கள் தங்கியுள்ள குடியிருப்புக்கு வெளியே காங்கிரஸ்-பாஜக தொண்டர்கள் குவிந்துள்ளதால் மோதல் அபாயம்.. போலீஸ் குவிப்பு
4:47 PM, 23 Jul

அதிருப்தி எம்எல்ஏக்களின் அரசியல் எதிர்காலத்திற்கு பாஜகவினர் சமாதி கட்டிவிட்டனர்: சித்தராமையா பேச்சு
4:08 PM, 23 Jul

கர்நாடக சட்டசபையில் எதிரொலித்த தமிழக பிரச்சினை

எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவு இல்லை என ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததற்கே எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்- சித்தராமையா பேச்சு

Karnataka Floor Test Live Updates: Will the Kumaraswamy government pass the trust vote?
Karnataka Floor Test Live Updates: Will the Kumaraswamy government pass the trust vote?
English summary
HD Kumaraswamy lead Karnataka Government today face acid test as it should be done the trust vote before 6 p.m. here is the live updates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X