பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது தொடக்கம்தான்.. 1 வாரத்தில் சர்ப்ரைஸ் இருக்கு.. கர்நாடகாவில் ஆட்சி அமைக்க பாஜக அதிரடி திட்டம்!

கர்நாடகாவில் தேர்தலை நடத்தாமலே ஆட்சியை பிடிக்க பாஜக பெரிய அளவில் திட்டங்களை வகுத்து இருப்பதாக தெரிகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி... கவிழ்ந்தது கர்நாடக அரசு

    பெங்களூர்: கர்நாடகாவில் தேர்தலை நடத்தாமலே ஆட்சியை பிடிக்க பாஜக பெரிய அளவில் திட்டங்களை வகுத்து இருப்பதாக தெரிகிறது. இன்னும் ஒரு வாரத்தில் இது தொடர்பான முழு விபரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மஜத அரசு கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்து உள்ளது. ஆட்சிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி தழுவி உள்ளது. அங்கு காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சியை நடத்துவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.

    அங்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 13 பேர் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் 3 பேர் பதவி விலகியதை அடுத்து அம்மாநில அரசு கவிழும் நிலைக்கு சென்றது. இதுதான் அங்கு ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

    என்ன சிக்கல்

    என்ன சிக்கல்

    கர்நாடக சட்டசபையின் பலம் 225. இங்கு பெரும்பான்மை பெற 113 எம்எல்ஏக்கள் தேவை. இப்போது காங்கிரஸ் - மஜதவில் இருந்து 16 பேர் ராஜினாமா செய்துள்ளதால், அந்த கூட்டணி பெரும்பான்மையை இழந்து இருக்கிறது. காங்கிரஸ் - மஜத கூட்டணி பலம் 102 ஆக குறைந்துள்ளது. பாஜகவின் பலம் 105 ஆக உள்ளது.

    மிக மோசம்

    மிக மோசம்

    இந்த நிலையில் கடைசியாக பாஜகவின் ஆப்ரேஷன் லோட்டஸ் வெற்றி பெற்றுவிட்டது என்று அரசியல் விமர்சகர்கள் எல்லோரும் எழுதி தொடங்கி உள்ளனர். ஆனால் இது வெறும் தொடக்கம்தான். ஆப்ரேஷன் லோட்டஸின் அடுத்த கட்டம் இன்னும் ஒரு வாரத்தில் மொத்தமாக மக்களுக்கு தெரியும் என்று பாஜகவிற்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

    சூப்பர்

    சூப்பர்

    அதன்படி ஆப்ரேஷன் லோட்டஸின் முதற்கட்ட திட்டத்தின்படி, காங்கிரஸ் மஜத எம்எல்ஏக்களை பதவி விலக வைக்க வேண்டும். அதன் மூலம் ஆட்சியை கவிழ்க்க வேண்டும். அது எல்லாம் நடந்துவிட்டது. அதே சமயம் ஆப்ரேஷன் லோட்டஸின் இரண்டாம் கட்ட திட்டத்தின் படி பாஜக தேர்தலை சந்திக்காமல் ஆட்சியை பிடிக்க திட்டமிட்டுள்ளது.

    எப்படி இது

    எப்படி இது

    இதற்காக பாஜக அதிரடி திட்டம் ஒன்றை எடுத்துள்ளது. தற்போது 16 எம்எல்ஏக்களின் பதவி விலகலை அடுத்து சட்டசபை பலம் 209 ஆக குறைந்துள்ளது. இந்த நிலையில் இன்னும் 10 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் - மஜத கூட்டணியில் இருந்து பதவி விலகுவார்கள் என்று கூறப்படுகிறது. இதுதான் ஆப்ரேஷன் லோட்டஸின் இரண்டாம் கட்ட திட்டம் என்கிறார்கள்.

    எப்படி குறையும்

    எப்படி குறையும்

    இதன் மூலம் சட்டசபையின் பலம் மேலும் குறைந்து 199 (10 எம்எல்ஏ மேலும் பதவி விலகினால்) ஆக மாறும். அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க 100 எம்எல்ஏக்கள் இருந்தால் போதும். பாஜக 105 உறுப்பினர்களை கொண்டு இருப்பதால், பாஜக தனிப்பெரும்பான்மை பெரும். இதன் மூலம் பாஜக எளிதாக ஆட்சி அமைக்க முடியும். அதன்பின் இடைத்தேர்தலில் பாஜக காலியாக இருக்கும் 20+ தொகுதிகளில் எளிதாக வென்று ஆட்சியை தொடர முடியும். இதுதான் ஆப்ரேஷன் லோட்டஸின் இரண்டாம் கட்ட திட்டம் என்று கூறுகிறார்கள்.

    அடுத்த வாரம்

    அடுத்த வாரம்

    அடுத்த வாரமே பாஜக இதை செய்யும். சில சர்ப்ரைஸ் காங்கிரஸ், மஜத உறுப்பினர்கள் தங்களால் பதவியை ராஜினாமா செய்வார்கள், அதில் முக்கியமான உறுப்பினர்களும் அடக்கம். அதன்பின் பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரும் என்று கூறுகிறார்கள்.

    English summary
    Karnataka Floor Test: Operation Lotus is still on, BJP plans to get the power with a new idea.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X