பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமித் ஷாவை வீழ்த்த புதிய அஸ்திரத்தை கையில் எடுத்த காங்கிரஸ்.. டி.கே சிவக்குமாரின் கடைசி நேர திட்டம்

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மஜத ஆட்சியை காப்பாற்றுவதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் டி.கே சிவக்குமார் புதிய அஸ்திரம் ஒன்றை கையில் எடுத்துள்ளார். பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும

Google Oneindia Tamil News

Recommended Video

    Karnataka Floor Test | புதிய அஸ்திரத்தை கையில் எடுத்த காங்கிரஸ்! சிவக்குமாரின் திட்டம்- வீடியோ

    பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மஜத ஆட்சியை காப்பாற்றுவதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் டி.கே சிவக்குமார் புதிய அஸ்திரம் ஒன்றை கையில் எடுத்துள்ளார்.

    கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற ஜனதா தளம் சார்பாக அமைக்கப்பட்ட ஆட்சி நீடிக்குமா, கவிழுவமா என்று இன்று முடிவாகிவிடும். பெரும்பாலும் கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேசமயம் உச்ச நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி நம்பிக்கை வாக்கெடுப்பை காங்கிரஸ் - மஜத தள்ளிப்போட கூட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

    தேவியை டோலி கட்டி தூக்கி சென்று பிரசவம்.. 5 கி.மீ தூரத்திற்கு நடந்த அவலம்.. ஆந்திராவில்! தேவியை டோலி கட்டி தூக்கி சென்று பிரசவம்.. 5 கி.மீ தூரத்திற்கு நடந்த அவலம்.. ஆந்திராவில்!

    என்ன பிரச்சனை

    என்ன பிரச்சனை

    கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 13 பேர் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் 3 பேர் பதவி விலகியதை அடுத்து அம்மாநில அரசு கவிழும் நிலைக்கு சென்றது. அதேபோல் இரண்டு சுயேச்சை எம்எல்ஏக்களும் காங்கிரஸ் - மஜத கூட்டணிக்கு ஆதரவு அளிக்காமல் விலக்கிக் கொண்டனர். இதனால் 117 ஆக இருந்த காங்கிரஸ் - மஜத கூட்டணி பலம் 102 ஆக குறைந்தது.

    என்ன தேவை

    என்ன தேவை

    கர்நாடக சட்டசபையின் பலம் 225. இங்கு பெரும்பான்மை பெற 113 எம்எல்ஏக்கள் தேவை. இப்போது காங்கிரஸ் - மஜதவில் இருந்து 16 பேர் ராஜினாமா செய்துள்ளதால், அந்த கூட்டணி பெரும்பான்மையை இழந்து இருக்கிறது. இதனால் கர்நாடகாவில் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. மாறாக பாஜகவிற்கு சுயேட்சையை ஆதரவுடன் 107 எம்எல்ஏக்கள் பலம் இருக்கிறது.

    என்ன திட்டம்

    என்ன திட்டம்

    இந்த நிலையில்தான் ஆட்சியை காப்பதற்காக புதிய திட்டம் ஒன்றை வகுத்து இருப்பதாக காங்கிரஸ் மூத்த உறுப்பினர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார். அதன்படி, எங்கள் ஆட்சியை காப்பதற்காக நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம். மஜத கட்சியும் அனைத்து விதமான தியாகங்களுக்கும் தயாராகி உள்ளது. முதல்வர் பதவியை துறக்க கூட குமாரசாமி தயாராக இருக்கிறார்.

    பாஜக வெல்ல கூடாது

    பாஜக வெல்ல கூடாது

    பாஜக கர்நாடகாவில் வெல்ல கூடாது. இதனால் எங்கள் கூட்டணி எந்த விதமான தியாகத்தை கூட செய்ய தயாராக இருக்கிறது. முதல்வர் பதவி இல்லாமல் கூட்டணியில் இருக்க கூட தயார் என்று மஜத கட்சியின் தலைமை எங்களிடம் தெரிவித்துள்ளது. கூட்டணியை காக்க அவர்கள் தயார்.

    என்னை முதல்வர்

    என்னை முதல்வர்

    காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா, ஜி பரமேஸ்வரா அல்லது என்னை கூட முதல்வராக கடைசி நேரத்தில் நியமிக்கலாம். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரின் ஆதரவையும் பெற வேண்டும் என்றால் முதல்வரை கூட நாங்கள் மாற்றுவோம். இது தொடர்பாக காங்கிரஸ் தலைமைக்கும் அறிவித்துவிட்டோம், என்று டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

    என்ன மாற்றம்

    என்ன மாற்றம்

    இதனால் கர்நாடகாவின் முதல்வராக கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் யாராவது பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ் எம்எல்ஏக்களை சமாளிக்க காங்கிரஸ் - மஜத இந்த திட்டத்தை கையில் எடுத்து இருப்பதாக தெரிகிறது.

    English summary
    Karnataka Floor Test: Shivakumar hints for appointing Congress CM as the last attempt to save the government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X