பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமித் ஷா கண்களில் விரலைவிட்டு ஆட்டும் ஒரே ஆள்.. ஜெயிண்ட் கில்லர்.. யார் இந்த டி.கே சிவக்குமார்?

கர்நாடக அரசியலில் மட்டுமில்லாமல் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் வலிமையான முகமாக டி.கே சிவக்குமார் மாறியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Karnataka Floor Test : DK Shivakumar : அமித்ஷாவுக்கே சிம்ம சொப்பனமாக இருக்கும் டி.கே சிவக்குமார்

    பெங்களூர்: கர்நாடக அரசியலில் மட்டுமில்லாமல் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் வலிமையான முகமாக டி.கே சிவக்குமார் மாறியுள்ளார்.

    வலிமையான மனிதர்கள் வலிமையான இடத்தில் இருந்துதான் வருவார்கள்.. இது கர்நாடகாவில் எடுக்கப்பட்ட படமான கேஜிஎப்பில் வரக்கூடிய வசனம். இந்த வசனம் அப்படியே பொருந்த கூடிய கர்நாடக அரசியல்வாதிதான் டி கே சிவக்குமார். இவரை கர்நாடக அரசியலில் ஜெயிண்ட் கில்லர் என்றுதான் எல்லோரும் அழைக்கிறார்கள்.

    அரசியல் என்பது திட்டங்களை பொறுத்துதான்.. உங்களிடம் சரியான வலிமையும், திட்டமும் இருந்தால் யாரை வேண்டுமானாலும் வீழ்த்தலாம். தன்னுடைய அரசியல் வாழ்க்கை தொடங்கியதில் இருந்து அதை தினமும் நிரூபித்துக் கொண்டு வருபவர்தான் டி கே சிவக்குமார்.

    மோடிகிட்ட நான் வேற சொல்லணுமா?.. அவருக்கே காது கேட்டிருக்கும்.. சூர்யாவுக்காக வாய் திறந்த ரஜினி மோடிகிட்ட நான் வேற சொல்லணுமா?.. அவருக்கே காது கேட்டிருக்கும்.. சூர்யாவுக்காக வாய் திறந்த ரஜினி

    எப்போது தொடங்கியது

    எப்போது தொடங்கியது

    இவருக்கு பெரிய அரசியல் குடும்ப பின்னணி எல்லாம் கிடையாது. காங்கிரஸ் கட்சியில் சாதாரண உறுப்பினராக சேர்ந்த டி கே சிவக்குமார், கொஞ்சம் கொஞ்சமாக கட்சிக்குள் வளர ஆரம்பித்தார். 1985க்கு பின்தான் அவரின் அரசியல் விஸ்வரூபம் எடுத்தது. கர்நாடகாவின் முக்கிய தொகுதியில் ஒன்றான கனகபுரா தொகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தார்.

    வளர்ச்சி

    வளர்ச்சி

    இப்போது இவர் மஜத தலைவர் குமாரசாமியின் ஆட்சியை காப்பாற்ற தீவிரமாக முயன்று வருகிறார். ஆனால் இதே மஜத கட்சியின் முக்கிய தலைவர்களை வீழ்த்திதான் அரசியலில் தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். ஆம் மஜத கட்சியின் அனைத்து முக்கியமான தலைவர்களையும் இவர் தனி ஆளாக நின்று வீழ்த்தி உள்ளார்.

    எப்போது நடந்தது

    எப்போது நடந்தது

    1989ல்தான் இவரை எல்லா அரசியல் தலைவர்களும் கவனிக்க தொடங்கினார்கள். எப்படியும் தோல்வி அடைவார் என்று தெரிந்து காங்கிரஸ் கட்சி சிவக்குமாரை சதான்பூர் தொகுதியில் மஜத தேசிய தலைவர் தேவ கவுடாவை எதிர்த்து நிற்க வைத்தது. ஆனால் அப்போது வந்த தேர்தல் முடிவு, இந்திய அரசியலையே உலுக்கியது. ஆம் அந்த தேர்தலில் தேவ கவுடா சிவக்குமாரிடம் படுதோல்வி அடைந்தார்.

    ஹீரோ உருவானார்

    ஹீரோ உருவானார்

    அப்போது உருவான ஹீரோதான் டிகே சிவக்குமார். தேவ கவுடாவின் குடும்ப உறுப்பினர்களை தோல்வி அடைய செய்வதுதான் இவருக்கு ஆரம்ப காலத்தில் கொடுக்கப்பட்ட டாஸ்க். அதை எளிதாக செய்து முடித்து கெத்து காட்டினார். ஆம் இரண்டு முறை தேவ கவுடாவை வீழ்த்தி இருக்கிறார். அதன்பின் குமாரசாமியை சதான்பூர் தொகுதியிலும், அவரின் மனைவி அனிதா குமாரசாமியை கனகபுரா தொகுதியில் வீழ்த்தி உள்ளார். அப்போதில் இருந்து இவரை கர்நாடக அரசியலில் ''ஜெயிண்ட் கில்லர்'' என்றுதான் எல்லோரும் அழைக்கிறார்கள்.

    எப்படிப்பட்டவர்

    எப்படிப்பட்டவர்

    இவரின் அரசியல் ராஜ தந்திரங்களுக்கு நிறைய எடுத்துக்காட்டுகள் கூறலாம். கடந்த லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. ஆனால் டிகே சிவக்குமாரின் சகோதரர் மட்டும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்த வெற்றி பாஜக உள்ளிட்ட எல்லோரையும் இப்போதும் துரத்திக்கொண்டு இருக்கிறது.

    அமித் ஷா

    அமித் ஷா

    அதேபோல் கர்நாடகாவில் மஜத - காங்கிரஸ் கூட்டணி உருவாக காரணமாக இருந்தது டிகே சிவக்குமார்தான். இரண்டு கட்சி எம்எல்ஏக்களையும் ரிசார்ட்டில் வைத்து ஆட்சியை அமைத்து, அமித் ஷாவை அதிர்ச்சி அடைய செய்தது டிகே சிவக்குமார்தான். அப்போது அமித் ஷாவிற்கு சிம்ம சொப்பனமாக மாறிய டிகே சிவக்குமார் இப்போதும் கடும் போட்டியாக பாஜகவிற்கு மாறியுள்ளார்.

    முக்கியமாக மும்பை

    முக்கியமாக மும்பை

    முக்கியமாக கர்நாடகாவில் ராஜினாமா செய்த 16 எம்எல்ஏக்கள் இருந்த மும்பை ரிசார்ட்டில் தனி ஆளாக போய் சண்டை போட்டார் டிகே சிவக்குமார். அப்போது வரை தென் இந்தியாவில் மட்டும் வைரலாக இருந்த டிகே சிவக்குமார், பாஜகவிற்கு எதிரான தேசிய முகமாக மாறினார். இவரை காங்கிரஸ் தலைவராக மாற்ற வேண்டும் என்று அப்போதே பலர் குரல் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பணக்காரர்

    பணக்காரர்

    கர்நாடகாவில் மட்டுமில்லாமல் இந்தியாவில் இருக்கும் பணக்கார அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர். கடந்த லோக்சபா தேர்தலில் இவர் தன்னிடம் 840 கோடி ரூபாய் மொத்தமாக சொத்தாக இருப்பதாக தெரிவித்துள்ளார். எப்போதும் ஹெலிகாப்டரில் பயணிக்கும் இவர், செய்தியாளர்களை சந்திக்க கூட ஹெலிகாப்டரில் வந்த கதை எல்லாம் நடந்து இருக்கிறது.

    எப்படி ரெய்டு

    எப்படி ரெய்டு

    இவரை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் பாஜக அரசு பலமுறை ரெய்டு அஸ்திரத்தை இவர் மீது ஏவி இருக்கிறது. ஒரே நாளில் இவருக்கு சொந்தமான 110 இடங்களில் கூட ரெய்டு நடந்து இருக்கிறது. ஆனால் இவரோ ''நான் எப்போதும் ராஜா'' என்று எந்த கவலையும் இல்லாமல் இருந்து வருகிறார். அதிகமாக கோபம் அடையும் இவர் பலமுறை சட்டசபையிலேயே மோசமான வார்த்தைகளில் கத்தி உள்ளார்.

    என்ன வழக்கு

    என்ன வழக்கு

    இவருக்கு எதிராக கிரானைட் ஊழல் வழக்கு, நிறைய முறைகேடு வழக்கு இருக்கிறது. ஆனால் இதை எல்லாம் நிரூபிக்க சரியான ஆதாரங்கள்தான் இல்லை. தற்போது இந்தியா முழுக்க இருக்கும் காங்கிரஸ் தலைவர்களில் அமித் ஷாவை எதிர்க்க கூடிய வலிமை படைத்த ஒரே தலைவர் என்றால் அது கண்டிப்பாக டி கே சிவக்குமார்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Karnataka Floor Test: Why DK Shivakumar is the last ray of hope for Congress all over India?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X