பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் இந்து தான்! மாட்டுக்கறி சாப்பிடுவேன்! என்னைக் கேள்வி கேட்க நீ யார்? கொதித்தெழுந்த சித்தராமையா

Google Oneindia Tamil News

பெங்களூரு : கர்நாடகாவில் மாட்டிறைச்சிக்கு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், "நான் ஒரு இந்து. நான் இதுவரை மாட்டிறைச்சி சாப்பிடவில்லை, ஆனால் நான் விரும்பினால், நான் சாப்பிடுவேன். என்னைக் கேள்வி கேட்க நீ யார்? என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான ஆளும் பாஜக அரசாங்கம் ஜனவரி 2021ஆன் ஆண்டு கர்நாடகா பசுக்கள் படுகொலை தடுப்பு மற்றும் பசுக்களைப் பாதுகாத்தல் சட்டம் சட்டத்தை இயற்றியது.

இந்த சட்டத்தின் படி அனைத்து வகையான கால்நடைகளையும் வாங்குவது, விற்பது, கொண்டு செல்வது, வெட்டுவது மற்றும் இறைச்சியை வியாபாரம் செய்வது என அனைத்து வகை நடவடிக்கைகளை சட்டவிரோதமாக கருத்தப்படும்.

தாய் மொழிக்கு துரோகம் செய்துவிட்டு அமித் ஷா அடிமைகளாக மாறாதீர்கள்.. பாஜகவினருக்கு சித்தராமையா குட்டுதாய் மொழிக்கு துரோகம் செய்துவிட்டு அமித் ஷா அடிமைகளாக மாறாதீர்கள்.. பாஜகவினருக்கு சித்தராமையா குட்டு

பசுக்கள் படுகொலை தடுப்பு சட்டம்

பசுக்கள் படுகொலை தடுப்பு சட்டம்

குறிப்பாக பசுக்கள், காளைகள், எருமைகள் மற்றும் எருதுகள் ஆகியவை இந்த சட்டத்தின் கீழ் அடங்கும்.மேலும் இந்த சட்டத்தின் படி, 13 வயதுக்கு மேற்பட்ட எருமை மாடுகள் மற்றும் நோய்வாய்ப்பட்ட கால்நடைகள் மட்டுமே இந்த சட்டத்திற்கு விதிவிலக்கு. ஆனாலும் கால்நடை மருத்துவர் சான்றளித்த பின்னரே அவற்றையும் இறைச்சிக்கக வெட்டவோ, இறைச்சியையோ விற்பனை செய்ய முடியும். இந்த சட்டத்தை மீறுவோருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 50,000 முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னாள் முதல்வர் சித்தராமையா

முன்னாள் முதல்வர் சித்தராமையா

இந்நிலையில் நான் இந்து, நான் விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா, கர்நாடக மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்து சர்ச்சையை மீண்டும் கிளப்பினார். தான் இதுவரை மாட்டிறைச்சி சாப்பிடாத இந்து, ஆனால் விரும்பினால் சாப்பிடுவேன். என்று கூறியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

மாட்டிறைச்சி தடை

மாட்டிறைச்சி தடை

கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் முன்னாள் முதலரான சித்தராமையா, "ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) பல்வேறு மதங்களை பின்பறும் மக்களுக்கு இடையே தடைகளை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டியதோடு, மாட்டிறைச்சி உண்பவர்கள் ஒரு சமூகத்தை மட்டும் சேர்ந்தவர்கள் அல்ல என்று கூறினார்.

மாட்டுக்கறி சாப்பிடுவேன்

மாட்டுக்கறி சாப்பிடுவேன்

தொடர்ந்து பேசிய அவர்," நான் ஒரு இந்து. நான் இதுவரை மாட்டிறைச்சி சாப்பிடவில்லை, ஆனால் நான் விரும்பினால், நான் சாப்பிடுவேன். என்னைக் கேள்வி கேட்க நீ யார்? என கேட்டதோடு, "மாட்டிறைச்சி உண்பவர்கள் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல, முஸ்லிம்கள் மட்டும் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்களா? இந்துக்கள் கூட மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள், கிறிஸ்தவர்களும் சாப்பிடுவார்கள். ஒருமுறை, கர்நாடக சட்டசபையில் கூட அதை நான் சொல்லியிருக்கிறேன், மாட்டிறைச்சி சாப்பிட வேண்டாம் என்று சொல்ல நீங்கள் யார்?" என கடுமையாக விமர்சித்துள்ளார்.

English summary
With the ban on the sale of beef in Karnataka, “I am a Hindu. I haven’t eaten beef yet, but if I wanted to, I would eat. Who are you to question me? Former Chief Minister of Karnataka Chidaramayya has said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X