பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜெயிக்கிறோமோ இல்லையோ.. கடைசி வரை விடாதே.. மோதிப் பார்த்துரு.. குமாரசாமி கத்துக் கொடுத்த பாடம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Karnataka Assembly : பெரும் போராட்டம்.. நான்காவது முறையாக முதல்வராகும் எடியூரப்பா- வீடியோ

    பெங்களூரு: ஜெயிக்குறமோ.. தோக்குறமோ கடைசி வரை சண்டை செஞ்சாகணும். எதையும் லேசுல விட்டுரக் கூடாது. முடிஞ்சவரை போராடணும். வந்தா மலை.. போனா... என்ற ரீதியில் போராட வேண்டும் என்பதை கர்நாடக முதல்வராக இருந்த குமாரசாமி நிரூபித்துவிட்டு போயுள்ளார்.

    ஊக்கமாக சண்டை யார் போடுவார்களோ அவர்களுக்குத்தான் இந்த உலகம் பயப்படும். அதற்கு திறமைசாலியாகவோ, புத்திசாலியாகவோ இருக்க வேண்டியதில்லை. தைரியசாலியாக மட்டும் இருந்தால் போதும்.

    மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி தேர்தல் அரசியலில் ஜஸ்ட் பாஸ் ஆகி 35 மார்க் எடுத்தாலும்... 80 மார்க், 90 மார்க் எடுத்த இரண்டு பெரிய தலைகளுக்கு நடுவில் 14 மாதங்கள் லீடராக இருந்துவிட்டு போய் உள்ளார். காரணம் ஜெயிக்கிறமோ, தோக்குறமோ முக்கியமில்லை.. சண்டை செய்ய வேண்டும். அதை சரியாக செய்துவிட்டு போய் உள்ளார் குமாரசாமி.

    குமாரசாமியின் போராட்டம்

    குமாரசாமியின் போராட்டம்

    கர்நாடகா அரசியல் குழப்பத்தை கடந்த ஒரு வாரமாக கவனித்தவர்களுக்கு நன்றாக ஒரு விஷயம் தெரிந்து இருக்கும். குமாரசாமி தோற்போம் என தெரிந்தும் இறுதிவரை சட்டசபையில் போராடினார். சட்டசபையில் மெஜாரிட்டி என்ற சண்டைக்கு அவர் பயப்படவில்லை. இந்த சண்டை எங்கிருந்து ஆரம்பித்தது என்பதை பார்த்தால் குமாரசாமியின் தைரியமும், புத்திசாலித்தனமும் தெரிந்துவிடும்.

    கிங்மேக்கர் குமாரசாமி

    கிங்மேக்கர் குமாரசாமி

    ஆம்.. கர்நாடக அரசியலில் மிகப்பெரிய டான்கள் என்று சொன்னால் அது காங்கிரஸ் மற்றும் பாஜக தான். அங்கு மதசார்பற்ற ஜனதா தளம் என்பது நம்ம ஊர் பாமகவைப் போல் தான். ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மிக வலுவான ஒரு அரசியல் கட்சி. கடந்த 14 மாதங்களுக்கு முன்பு கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மூன்று கட்சிகளுமே தனித்து தான் போட்டியிட்டன. இதில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

    காங்.79, பாஜக 105

    காங்.79, பாஜக 105

    அதேநேரம் கர்நாடக சட்டசபையில் மொத்தம் உள்ள 226 இடங்களில் பாஜக 105 இடங்களிலும், காங்கிரஸ் 79 இடங்களிலும் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களிலும் சுயேட்சைகள் 2 இடங்களிலும் பகுஜன் சமாஜ் ஒரு இடத்திலும் வென்று இருந்தன. இதனால் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவு இல்லாமல் இரு கட்சிகளும் ஆட்சியமைக்க முடியாத நிலை இருந்தது.

    மெஜாரிட்டி இல்லை

    மெஜாரிட்டி இல்லை

    பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததால் அம்மாநில ஆளுநர், பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். ஆனால் அவரால் முதல்வாராக முடிந்த போதிலும் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாது என்ற சூழலில் பதவியில் இருந்து இரண்டே நாளில் விலகினார்.

    காங்கிரஸ் கட்சி சம்மதம்

    காங்கிரஸ் கட்சி சம்மதம்

    அதேசமயம் 79 இடங்களில் வென்ற காங்கிரஸ், பாஜக ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக 38 இடங்களை மட்டுமே பெற்ற குமாரசாமிக்கு முதல்வர் பதவியை எந்த நிபந்தனையும் இல்லாமல் விட்டுத்தர சம்மதித்தது. இதனால் கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்றார். கடந்த 14 மாதங்கள் முதல்வராக இருந்த குமாரசாமிக்கு, கடந்த லோக்சபா தேர்தல் படுதோல்வி.. மிகப் பெரிய அடியை கொடுத்தது.

    குமாரசாமி அதிர்ச்சி

    குமாரசாமி அதிர்ச்சி

    இதன் காரணமாக காங்கிரஸ் எம்ல்ஏக்கள் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள் 16 பேர் பாஜகவுக்கு ஆதரவாக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குமாரசாமி அவர்களை சமாதானம் செய்ய கடுமையாக போராடினார். ஒருபக்கம் ஆட்சிக்கு சிக்கல், மறுபக்கம் பாஜக நெருக்கடி இருந்த போதிலும் தைரியமாக தானாக முன்வந்து பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிப்பதாக அறிவித்தார்.

    குமாரசாமி பதவி விலகல்

    குமாரசாமி பதவி விலகல்

    அதேநேரம் ஒருவாரம் எம்எல்ஏக்களை சமாதானம் செய்ய முயற்சித்து பார்த்தார். அதில் ஒருவர் மட்டுமே காங்கிரஸ்க்கு ஆதரவாக திரும்பி வந்தார். மற்றவர்கள் வரவில்லை. எனினும் தோற்போம் என்று தெரிந்தும் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை துணிந்து நடத்தினார். இதில் அவருக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் கிடைத்தன. இதனால் நேற்று இரவு தனது முதல்வர் பதவியை குமராசாமி ராஜினாமா செய்தார்.

    போராடிய குமாரசாமி

    போராடிய குமாரசாமி

    குமாரசாமியிடம் கவனித்த ஒரு விஷயம் என்றால் நமக்கு மக்கள் அளித்தது 38 மார்க் என்றாலும் அவர்களுக்கே தலைவனானார். ஆனால் அதேநேரம் 79 மற்றும் 105 மார்க் எடுத்த பாஜக , காங்கிரஸ் கட்சியினரால் அது முடியில்லை. காரணம் குமாரசாமியின் தைரியம். தோக்குறமோ இல்லையோ சண்டை செஞ்சாகணும். எதையும் லேசில் விடக்கூடாது வந்தா மலை போனா.. என்ற ரீதியில் குமாரசாமி போராடியதே முக்கிய காரணம்.

    English summary
    karnataka cm hd kumaraswamy tight fight between bjp and congress even he just pass only in assembly election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X