பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடகா: ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள்.. பஸ், மெட்ரோ ரயில் இயங்கும்.. வேறென்ன தளர்வுகள் தெரியுமா?

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. பஸ் மற்றும் மெட்ரோ ரயில்கள் 50% பயணிகளுடன் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கர்நாடகாவும் ஓன்றாகும்.

அங்கு கடந்த மார்ச் முதல் கொரோனா தீவிரமாக பரவியது. இதிலும் மாநில தலைநகரான பெங்களுருவில் தொற்று உச்சம் தொட்டது.

மேலும் தளர்வுகள்

மேலும் தளர்வுகள்

ஒரு கட்டத்தில் கர்நாடகாவில் தினசரி பாதிப்பு 50,000-ஐ கடந்து சென்ற நிலையில் கடுமையான ஊரடங்கு காரணமாக தொற்று குறைய தொடங்கியது. தற்போது 6,000-க்கும் கீழான தினசரி பாதிப்புகளே பதிவாகி வருகின்றன. இதனால் ஊரடங்கில் ஏற்கனவே சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்த நிலையில் கர்நாடகாவில் ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:-

பஸ், ரயில் இயக்கம்

பஸ், ரயில் இயக்கம்

* அனைத்து கடைகளும் காலை முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதிக்கப்படும்.
* ஹோட்டல்கள், கிளப்கள் குளிர்சாதன வசதி இல்லாமல் 50% இருக்கை வசதியுடன் மாலை 5 மணி வரை இயங்ககலாம்.
* பஸ் மற்றும் மெட்ரோ ரயில்கள் 50% பயணிகளுடன் இயக்கப்படும்.
* விடுதிகள் மற்றும் ரிசார்ட்களில் 50% பேர் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்

இரவு ஊரடங்கு

இரவு ஊரடங்கு

* உடற்பயிற்சி கூடங்கள்(ஜிம்கள்) குளிர்சாதன வசதி இல்லமால் 50% பேருடன் இயங்கலாம்.
* மைசூர் மாவட்டத்தில் 10%-க்கு மேல் பாசிட்டிவ் விகிதம் உள்ளதால் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும்
* தினமும் இரவு 7 முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.
* வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் திங்கள் காலை 5 மணி வரை வார இறுதி ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும்.

16 மாவட்டங்கள்

16 மாவட்டங்கள்

• நீச்சல் குளங்கள், வழிபாட்டுத் தலங்கள், மால்கள், தியேட்டர்கள், ஏசி ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மற்றும் பப்கள் இயங்க அனுமதி இல்லை.
* 5% க்கும் குறைவான பாஸிட்டிவ் விகிதம் கொண்ட16 மாவட்டங்களில் மேற்கண்ட தளர்வுகள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
* கர்நாடகாவில் 16 மாவட்டங்களில் 5% க்கும் குறைவான பாஸிட்டிவ் விகிதம் உள்ளது, 13 மாவட்டங்களில் 5-10% க்கு இடையில் பாஸிட்டிவ் விகிதம் இருக்கிறது.

English summary
Karnataka goverment has been announced that bus and metro trains will run with 50% passengers There have been some relaxations in curfew in the state of Karnataka. It has been announced that bus and metro trains will run with 50% passengers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X