பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெங்களூருவில் திடீரென கொரோனா கிடுகிடு.. இவங்க தான் காரணம்.. கர்நாடகா அரசு பகீர் குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

பெங்களூரு: பெங்களூருவில் கொரோனா பரவ வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் தான் காரணம் என்று கர்நாடகா மாநில அரசு குற்றம்சாட்டி உள்ளது.

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா அதிகம் பரவும் மாநிலங்களில் பட்டியலில் குஜராத்தையும் தாண்டி நான்காவது இடத்தை கர்நாடகா பிடித்துள்ளது கர்நாடகாவில் 59652 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 Karnataka government said, Inter-state travellers responsible for spurt in COVID-19 cases in Bengaluru

கர்நாடகாவில் இதுவரை 21776 பேர் குணம் அடைந்துவிட்ட நிலையில் , 36627 பேர் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தலைநகர் பெங்களுருவில் தான் அதிகபட்சமாக 29619 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் பெங்களூருவில் தான் அதிகமாக உள்ளது. இதுவரை பெங்களூருவில் மட்டும் 631 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெங்களூருவில் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருகிறது. இதனால் சிகிச்சை அளிப்பதற்கு கூட பல சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.

மிக உச்சமாக 24 மணிநேரத்தில் 38,902 பேருக்கு கொரோனா- மகாராஷ்டிராவில் 3 லட்சத்தை தாண்டியது பாதிப்பு!மிக உச்சமாக 24 மணிநேரத்தில் 38,902 பேருக்கு கொரோனா- மகாராஷ்டிராவில் 3 லட்சத்தை தாண்டியது பாதிப்பு!

இந்நிலையில் கடந்த சில நாட்களில் பெங்களூருவில் கொரோனா பரவல் கடுமையாக அதிகரித்துள்ளதற்கு வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் தான் காரணம் என்று கர்நாடகா அரசு குற்றம்சாட்டி உள்ளது. மகாராஷ்டிரா போன்ற ஹாட் ஸ்பாட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தொற்றுநோயைக் கொண்டு வந்திருக்கலாம் என்றும் குற்றம்சாட்டி உள்ளது.

Recommended Video

    Karnataka-வில் Lockdown நீடிக்குமா ? | Kerala-வில் சமூக பரவலா ? | முதல்வர்கள் பதில்

    இதனிடையே கர்நாடகாவில் கொரோனா தொற்றுநோய் சமூகம் பரவலாக மாறவில்லை என்று மாநில சுகாதார துறை அமைச்சர் கே.சுதாகர் கூறினார், ஒருவேளை அப்படி இருந்தால், தொற்றுநோய்களின் எண்ணிக்கை லட்சங்களை கடந்திருக்கும் என்றும் அமைச்சர் கே சுதாகர் கூறினார்.

    English summary
    With the Bengaluru city witnessing a sharp increase in COVID-19 cases in the past few days, the Karnataka government holds inter-state travellers responsible for the spurt in infections, saying those from hot spot states like Maharashtra could have brought the infection.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X