பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடகாவில்... இனி 24/7 நேரமும் கடைகள், ஷாப்பிங் மால்கள் இயங்கலாம்... மாநில அரசு அனுமதி!

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள் ஆண்டின் அனைத்து நாட்களிலும் தினமும் 24 மணி நேரம் செயல்பட மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

தினமும் எட்டு மணி நேரத்திற்கு மேலேயும், வாரத்தில் நாற்பத்தெட்டு மணி நேரத்திற்கும் மேலாகவும் ஊழியர்களை பணிபுரிய உத்தரவிட கூடாது என வணிக நிறுவனங்களுக்கு அரசு கூறியுள்ளது.

மாநிலத்தில் வேலைவாய்ப்பை உருவாக்குவதையும்,பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.

24 மணி நேரம் கடைகள்

24 மணி நேரம் கடைகள்

இது தொடர்பாக கர்நாடகா மாநில அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகா மாநிலத்தில் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுடன் பணிபுரியும் அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள் ஆண்டின் அனைத்து நாட்களிலும் தினமும் 24 மணி நேரம் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. மாநிலத்தில் வேலைவாய்ப்பை உருவாக்குவதையும்,பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

8 மணி நேரத்திற்கு மேல் பணிபுரிய கூடாது

8 மணி நேரத்திற்கு மேல் பணிபுரிய கூடாது

அனைத்து கடை, ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களும் தினமும் எட்டு மணி நேரத்திற்கு மேலேயும், வாரத்தில் நாற்பத்தெட்டு மணி நேரத்திற்கும் மேலாகவும் ஊழியர்களை பணிபுரிய உத்தரவிட கூடாது. கூடுதல் வேலை நேரமும் பத்து மணி நேரத்திற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு ஊழியர் எட்டு மணி நேரத்திற்கு மேல் பணிபுரிந்தால் அவருக்கு கூடுதல் பண பலன்களை வழங்க வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தது வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும்.

இரவு பணியில் பெண் ஊழியர்?

இரவு பணியில் பெண் ஊழியர்?

ஒரு பெண் ஊழியரிடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெற்றபின் கடை அல்லது வணிக நிறுவனத்தின் உரிமையாளர் அந்த பெண் ஊழியருக்கு தகுந்த பாதுகாப்பை வழங்குவதை உறுதி செய்து பெண் ஊழியரை இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை பணிபுரிய அனுமதிக்கலாம்.

நடவடிக்கை எடுக்கபப்டும்

நடவடிக்கை எடுக்கபப்டும்

ஷிப்ட் நேரம் தொடர்பாக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை உரிமையாளர்கள் அல்லது மேலாளர்கள் மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதன் உத்தரவுகளை மீறுவது நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் என்று அரசாங்கம் கூறியது. இந்த புதிய முறை அடுத்த 3ஆண்டுகளுக்கு பொருந்தும் என்று கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.

English summary
The state government has allowed shops and businesses and hotels in the state of Karnataka to operate 24 hours a day, all days of the year
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X