• search
பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பெங்களூரில் வேலை பார்க்கும் தமிழரா.. எதுக்கும் மூட்டை முடிச்சை கட்டி ரெடியாக இருக்கவும்!

|
  4 storey building in Bengaluru tilts suddenly | திடீரென்று சாய்ந்த அடுக்குமாடி குடியிருப்பு - வீடியோ

  பெங்களூர்: கர்நாடக அரசு தனது மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் உட்பட பல துறை சார்ந்த தொழில்களிலும், 75 சதவீதம் கன்னடர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்க வகை செய்யும், வகையிலான சட்டத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

  தேசியவாதம் பேசக்கூடிய பாஜக ஆளக்கூடிய மாநிலமான கர்நாடகாவில் இப்படி ஒரு சட்டம் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது புருவங்களை உயர்த்தச் செய்துள்ளது.

  ஜெகன் மோகன் ரெட்டி ஆளக்கூடிய ஆந்திராவில் கடந்த ஜூலை மாதம், இப்படியான ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. இதுபோன்ற கெடுபிடிகளால்தான் கியா மோட்டார்ஸ் நிறுவனம், ஆந்திராவிலிருந்து கிளம்பி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தகவல் தொழில்நுட்ப தலைநகர் என அழைக்கப்படும் பல மாநில மக்கள் பணியாற்றக் கூடிய பெங்களூரை கொண்ட கர்நாடகாவும் அதே பாதையில் பயணிக்க திட்டமிட்டுள்ளது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

  பிரிவினை

  பிரிவினை

  'கர்நாடக தொழிலாளர்களுக்கான தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், சிறு மற்றும் குறு தொழில்கள், கூட்டாண்மை சட்டம்' என்ற பெயரில் எடியூரப்பா அரசு இந்த சட்டத்தை கொண்டுவரப்போகிறதாம். இதுபற்றி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சுரேஷ்குமார் கூறுகையில், இந்த சட்டம் பிரிவினைவாதம் கிடையாது. உள்ளூர் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று கொண்டுவரப்படும் சட்டம் என்று விளக்கம் கூறியுள்ளார்.

  கன்னடர்கள் குமுறல்

  கன்னடர்கள் குமுறல்

  "கன்னடர்கள்தான் தங்களுக்கு உள்ளூரிலேயே பாகுபாடு காட்டப்படுவதாகவும், வேலை கிடைக்கவில்லை என்றும், மற்றவர்கள் வந்து வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள். இது ஒரு தீவிரமான கவலை. எனவே அனைத்து மக்களையும், சட்ட வல்லுநர்களையும் கலந்தாலோசித்த பிறகு , இந்த மசோதாவை விரைவில் இறுதி செய்வோம், " என்றார் சுரேஷ்குமார்.

  யார் கன்னடர்?

  யார் கன்னடர்?

  கன்னடராக யார் கருதப்படுவார்கள் என்பதற்கான அளவுகோலை இறுதி செய்து தொழிலாளர் ஏற்கனவே ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. "தொடர்ந்து 15 ஆண்டுகளாக கர்நாடகாவில் வசிக்க வேண்டும், அதேபோல கன்னடத்தில் எழுதப், படிக்க தெரிந்திருக்க வேண்டும், அவர்கள்தான், கன்னடர்களாக கருதப்படுவார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. "கர்நாடகாவில் உள்ளவர்கள் கன்னடத்தைப் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என்பது நியாயமான நிபந்தனைதான். இங்கே பணியாற்றிகி கொண்டு உள்ளூர் மொழி தெரியாமல் இருக்க கூடாது என்று நாங்கள் நினைக்கிறோம்" என்று அமைச்சர் சுரேஷ் குமார் மேலும் கூறினார்.

  எப்போது வரும் சட்டம்

  எப்போது வரும் சட்டம்

  இந்த மசோதா மாநில சட்டமன்றத்தின் வரவிருக்கும் பட்ஜெட் அமர்வில் தாக்கல் செய்யப்படுமா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, ஏனெனில் இந்த மசோதாவின் தயாரிப்பு பணிகள் இன்னும் நடக்கின்றன. "இந்த சட்டத்தின் அவசியம் மற்றும் தன்மைகள் குறித்து அனைத்து மக்களையும், அதை எதிர்ப்பவர்களையும் கூட உணர வைப்போம் என்று நம்புகிறோம். அனைவரின் ஒருமித்த கருத்துடன் இதை செயல்படுத்த விரும்புவதால் நாங்கள் தொழில் துறையினர் மற்றும் தொழில்துறை தலைமைகளுடன் பேசி வருகிறோம், " என்றும் அமைச்சர் கூறினார்.

   
   
   
  English summary
  The Karnataka government is in the process of drafting a legislation that will mandate 75% reservations for locals in various sectors, including private industries.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
  X