பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எவ்வித அறிவிப்புமின்றி.... திஷா ரவியை கைது செய்த டெல்லி போலீஸ்... காங். எம்பி குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடக காவல்துறை மற்றும் மாநில அரசுக்கு முறையான தகவல் தெரிவிக்கப்படாமல் திஷா ரவியை பெங்களூருவில் வைத்து டெல்லி போலீஸ் கைது செய்துள்ளதாகக் காங்கிரஸ் எம்பி நசீர் உசேன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்த 22 வயதான சூழலியல் செயற்பாட்டாளர் திஷா ரவி. இவர்தான் கிரேட்டா துன்பர்க்கின்' ஃப்ரைடேஸ் ஃபார் ஃப்யூச்சர்' என்கிற அமைப்பை இந்தியாவில் நிறுவியவர்.

Karnataka govt, police not informed on Disha Ravis arrest says Cong MP

கடந்த சில வாரங்களுக்கு முன் கிரெட்டா துன்பெர்க் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்திருந்தார். அத்துடன் அதில் டூல்கிட் ஒன்றையும் இணைந்திருந்தார். அந்த டூல்கிட்டை வடிவமைத்தது காலிஸ்தான் பிரிவினைவாதிகளில் ஒருவர் என்று டெல்லி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும், திஷா ரவி இந்த 'டூல்கிட்டை' உருவாக்கியதில் முக்கிய சதியில் ஈடுபட்டவர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகவே சமீபத்தில் திஷா ரவியை டெல்லி போலீசார் பெங்களூருவில் கைது செய்தனர்.

கல்லூரி மாணவி இப்படி கைது செய்யப்பட்டதற்கு நாட்டிலுள்ள பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி நசீர் உசேன் கூறுகையில், "திஷா ரவியின் கைது கர்நாடக காவல்துறை மற்றும் மாநில அரசுக்கு தெரிவிக்காமல் செய்யப்பட்டது.

நடு ரோட்டில் வைத்து... சரமாரியாக வெட்டி கொல்லப்பட்ட வக்கீல் தம்பதி... தெலங்கானாவில் பரபரப்புநடு ரோட்டில் வைத்து... சரமாரியாக வெட்டி கொல்லப்பட்ட வக்கீல் தம்பதி... தெலங்கானாவில் பரபரப்பு

விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடுபவர்களை எப்படி பஞ்சாபில் கைது செய்யப்படுகிறார்களோ, அதேபோல தான் திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 6 ஆண்டுகளாகவே மத்திய அரசு சுமார் 140 பேரை இது போல கைது செய்துள்ளது.

ஆனால், அவர்களில் வெறும் 1% குறைவானவர்கள் மீதே குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் யாரும் அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கக் கூடாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். பொதுமக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்த அவர்கள் விரும்புகிறார்கள்" என்றார்.

English summary
Congress MP Syed Naseer Hussain alleged on Wednesday that the Karnataka government and the state police were not informed about climate activist Disha Ravi’s arrest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X