பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கர்நாடகா.. தேவ கவுடா, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட 4 பேர் ராஜ்யசபாவிற்கு போட்டியின்றி தேர்வு

மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தேசிய தலைவர் தேவ கவுடா கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

பெங்களூர்: மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தேசிய தலைவர் தேவ கவுடா கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபாவிற்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ராஜ்ய சபா தேர்தலுக்கான ஏற்பாடுகள் நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது. இதில் கர்நாடகாவில் ராஜ்யசாப தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அங்கு கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது.

Karnataka: HD Deve Gowda, Mallikarjun Kharge have been elected unopposed to the Rajya Sabha

பாஜக கட்சி இந்த தேர்தலில் புதிய வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது. அங்கு மொத்தம் 4 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தேசிய தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர் தேவ கவுடா கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபாவிற்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Recommended Video

    Guidelines for Travelling to Karnataka from other states

    இவர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் போட்டியிட்டார். இரண்டாவது முறையாக இவர் ராஜ்யசபா எம்பியாகி உள்ளார். அதேபோல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே போட்டியின்றி இந்த தேர்தலில் வெற்றிபெற்று இருக்கிறார்.

    கொரோனா தாக்கிய அமெரிக்கா பெண்ணுக்கு மாற்று நுரையீரல் ஆபரேசன் - இந்தியா வம்சாவளி டாக்டர் சாதனைகொரோனா தாக்கிய அமெரிக்கா பெண்ணுக்கு மாற்று நுரையீரல் ஆபரேசன் - இந்தியா வம்சாவளி டாக்டர் சாதனை

    பாஜகவைச் சேர்ந்த அசோக் கஸ்தி மற்றும் இரானா கடாடி ஆகியோரும் போட்டியின்றி ராஜ்யசபாவிற்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் இருவருமே பாஜகவில் புதிய கைகள், பெரிய பிரபலம் இல்லாத இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Karnataka: JD(S)' chief HD Deve Gowda, Congress leader Mallikarjun Kharge have been elected unopposed to the Rajya Sabha.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X