• search
பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

அது இருந்தாதானே மனைவியோடு தாம்பத்யம் நடக்கும்.. கொடூரமாக யோசித்த டாக்டர் சையீதா! கம்பி எண்ணுகிறார்

|

பெங்களூர்: ஒரு பெண் டாக்டர் இப்படியும் செய்வாரா என்று 10 வருடங்கள் முன்பாக கர்நாடக மாநிலத்தையே கலங்கடித்த ஒரு சம்பவம் நடந்தது. அந்த பதற வைக்கும் சம்பவம் தொடர்பாக, டாக்டருக்கு 10 வருடம் கடுங்காவல் தண்டனை விதித்து பெங்களூர் சிட்டி சிவில் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

10 வருடங்களுக்கு முன்பு அப்படி என்னதான் செய்தார் அந்த 42 வயது பெண் டாக்டர்? இதோ அந்த சம்பவம் பற்றிய ஒரு பிளாஷ் பேக்.

பெங்களூரு நகரின் குர்ரப்பனபாளையா பகுதியை சேர்ந்தவர் சையீதா அமீனா நஹிம். பல் மருத்துவரான இவர், கோரமங்களா 8வது பிளாக் பகுதியில், க்ளீனிக் நடத்தி வந்தார். இவர் முன்பு மைசூரில் டாக்டராக பணியாற்றியபோது, அங்கே, அர்ஷத் அலி என்பவருடன் அவருக்கு காதல் மலர்ந்தது.

வேறு பெண்ணுடன் திருமணம்

வேறு பெண்ணுடன் திருமணம்

இருவரும் ஜோடியாக காதலித்து சுற்றி திரிந்துள்ளனர். இந்த நிலையில்தான் சையீதா பெங்களூருக்கு வந்துள்ளார். இந்த நேரத்தில், சையீதாவுக்கு தெரியாமல், அர்ஷத் அலி, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த விஷயம், சையீதாவுக்கு தெரியவந்தபோது, அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றார். அவரால், அர்ஷத் செய்த செயலை மன்னிக்க முடியவில்லை. மாபெரும் துரோகம் செய்துவிட்டாரே என்று மனதுக்குள்ளேயே புழுங்கியுள்ளார்.

சையீதா திட்டம்

சையீதா திட்டம்

தன்னுடன் வாழாத, அர்ஷத் அலி, வேறு பெண்ணுடன் தாம்பத்திய வாழ்க்கை நடத்த கூடாது என்ற முடிவுக்கு சையீதா வந்தார். இருப்பினும் என்ன செய்ய? கல்யாணம் வேறு ஆகிவிட்டது என்று யோசித்தபடியே இருந்துள்ளார் சையீதா. அப்போதுதான், ஒரு குரூர திட்டம், சையீதா மனதிற்குள் உதித்துள்ளது. மனதில் அந்த திட்டத்தோடு, அர்ஷத்தை, கோரமங்களாவிலுள்ள தனது க்ளீனிக்கிற்கு வரும்படி போனில் அழைத்துள்ளார்.

ஜூஸில் மயக்க மருந்து

ஜூஸில் மயக்க மருந்து

முன்னாள் காதலி கூப்பிடுகிறாரே என்று, அர்ஷத்தும் அங்கே சென்றுள்ளார். தனது மனதில் உள்ள கோபத்தை வெளியே காட்டாத சையீதா, அர்ஷத்தை இன்முகத்தோடு வரவேற்று, உபசரித்துள்ளார். அவருக்கு ஜூஸ் கொடுத்து குடிக்க சொல்லியுள்ளார். அவ்வளவுதான். ஜூஸ் குடித்ததும், அர்ஷத்துக்கு தலை சுற்றியது. மயங்கிவிட்டார். ஆம்.. நீங்கள் நினைப்பது சரிதான். ஜூஸில் மயக்க மருந்து கலக்கியிருந்தார் சையீதா. நோயாளிகளுக்கு வலி தெரியாமல் இருக்க, பயன்படுத்தப்படும் மயக்க மருந்து அது.

சாக்கடையில் வீச்சு

சாக்கடையில் வீச்சு

ஆணுறுப்பை மறுபடியும் கொடுத்தால், அதை பொருத்தி ஆபரேஷன் செய்ய மருத்துவர்கள் தயாராக இருந்தனர். ஆனால் அப்படி நடக்க கூடாது என்பதற்காகத்தான், சையீதா அதை சாக்கடையில் வீசிவிட்டார். எனவே, ஆணுறுப்பு இல்லாமல், வீடு திரும்பினார் அர்ஷத். கடுப்பான அவர் போலீசில் இதுபற்றி புகார் அளித்தார். இந்த வழக்கில்தான் பெங்களூர் சிட்டி செஷன்ஸ் நீதிமன்றம் 10 வருடங்கள் பிறகு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி சையீதாவுக்கு 10 வருடம் சிறை தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்த பணம் அர்ஷத்துக்கு செல்ல வேண்டும்.

நீதிமன்றம் அதிரடி

நீதிமன்றம் அதிரடி

முன்னதாக, சையீதா தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், அர்ஷத்துக்கு, இப்படியாக காரணம், அவர் சையீதாவை பார்க்க வரும்போது ஏற்பட்ட வாகன விபத்தால்தான் என்று தெரிவித்தார். ஆனால், உடலில் வேறு எங்குமே காயம் இல்லை என்பதை அர்ஷத் தரப்பு வக்கீல் முன்வைத்தார். இரு தரப்பு வாதங்களையும் நன்கு அலசி ஆராய்ந்த, நீதிபதி வித்யாதர் ஷிராகட்டி இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். இப்போது கர்நாடகா முழுக்க இந்த தீர்ப்பு பற்றிய விவாதம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

 
 
 
English summary
A lady doctor who has cut down her ex boy friend's penis in Bangalore given 10 years jail.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X