பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடகத்தில் 15 அடி ஆழ போர்வெல்லில் விழுந்த இளைஞர் பாதுகாப்பாக மீட்பு

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக மாநிலம் உடுப்பியில் 15 அடி ஆழ குழியில் விழுந்த இளைஞர் பல மணிநேர போராட்டங்களுக்குப் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் பிந்தோர் அருகே உள்ளது மரவந்தே கிராமம். இந்த கிராமத்தில் விவசாய நிலத்தை சுற்றி போர்வெல் அமைக்கப்பட்டுள்ளது.

Karnataka man falls in to 15 feet deep borewell hole

இந்த போர்வெல் குழியில் இன்று காலை யாரோ ஒருவர் விழுந்துவிட்டார். தகவலறிந்த தீயணைப்பு படையினர் அவரை மீட்க சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அவர்கள் அந்த குழிக்கு பக்கத்தில் இன்னொரு பள்ளத்தை தோண்டினர். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த பள்ளம் சரிந்தது. இதனால் 15 அடி ஆழ பள்ளத்தில் விழுந்த இளைஞரை வேறு வழியில் மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இப்படியான பல மணிநேரப் போராட்டத்துக்குப் பின்னர் அந்த இளைஞர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். போர்வெல் குழியில் இருந்து மீட்கப்பட்ட இளைஞர் உற்சாகமாகவும் காணப்பட்டார். இதனால் அப்பகுதியே நிம்மதி பெருமூச்சுவிட்டது.

English summary
A man falls into a 15-feet-deep hole as the land around the borewell that was being dug in Maravanthe village near Byndore in Udupi district, collapsed suddenly. Rescue operation underway.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X