பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கர்நாடகாவில் திப்பு சுல்தான் ஜெயந்தி கூடாது... கொந்தளிக்கும் பாஜக.. 9 மாவட்டங்களில் 144 தடையுத்தரவு

Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடகாவில் திப்பு சுல்தான் ஜெயந்தி, கொந்தளிக்கும் பாஜக.. வீடியோ

    பெங்களூர்: கர்நாடகாவில் அரசு சார்பில், திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் நடத்திய நடத்தி வரும் பெரும் போராட்டத்தின் காரணமாக 9 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    18வது நூற்றாண்டில் மைசூர் மாகாணத்தை ஆண்டு வந்த முஸ்லீம் மன்னர் திப்பு சுல்தான். இவர் வெள்ளையர்களுக்கு எதிரான போரின்போது கொல்லப்பட்டார்.

    Karnataka marks Tipu Jayanti amid tight security; several BJP leaders detained

    கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்ற போது, திப்பு சுல்தான் ஜெயந்தி என்பது அரசு சார்பிலான விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்து செயல்படுத்தினார். அப்போது முதலே, பாரதிய ஜனதா கட்சி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    திப்பு சுல்தான் காலத்தில் இந்துக்கள் பலவிதமான கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், பிராமணர்கள் உயிரோடு எரிக்கப்பட்டதாகவும் பாஜக தலைவர்கள் மற்றும் இந்து அமைப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    எனவேதான் திப்பு பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட கூடாது என்பது அவர்கள் கோரிக்கை. ஆனால் திப்புவின் சுதந்திர போராட்ட தியாகத்தை பாஜக கொச்சைப்படுத்துவதாக கூறி, பலத்த பாதுகாப்புக்கு நடுவே அரசு விழாவாக சித்தராமையா அரசு நடத்த துவங்கியது.

    தற்போது காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசில், முதல்வராக குமாரசாமி பதவி வகித்து வரும் நிலையில், இந்த ஆண்டும் அரசு விழாவாக திப்பு ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதை எதிர்த்து பாஜக மற்றும் இந்து அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    போராட்டங்களையடுத்து, பெங்களூரில் சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதக்கலவரங்களுக்கு பெயர்பெற்ற மங்களூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும், குடகு மாவட்டத்திலும், பாஜக மற்றும் இந்து அமைப்பினர் தீவிரமாக போராட்டம் நடத்தினர். அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கர்நாடகாவின் 9 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதனிடையே பாகிஸ்தான் நாட்டு அரசின் செய்தி சேனலான பிடிவி தனது ட்விட்டர் கணக்கில் திப்புவை புகழ்ந்து வெளியிட்டுள்ள ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    The Karnataka government Saturday celebrated the birth anniversary of the controversial 18th century ruler of the erstwhile Mysore Kingdom, Tipu Sultan, bringing the state under a thick security blanket amid threats of protest by the BJP and many Hindu outfits.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X