பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2-வது அலை எச்சரிக்கை ...இரவு நேர ஊரடங்கு...புத்தாண்டு பார்ட்டிக்கு தடை... கர்நாடகா முடிவு!

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஜனவரி பிப்ரவரி மாதத்தில் கொரோனா இரண்டாவது அலைக்கு வாய்ப்பு உள்ளதால் அங்கு புத்தாண்டு பார்ட்டிக்கு தடை விதிக்கவும், புத்தாண்டு ஒரு வாரத்திற்கு முன்னர் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தவும் அந்த மாநில அரசு திட்டமிட்டு வருகிறது.

கர்நாடகாவில் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. மக்கள் நன்கு விழிப்புடன் இருந்தால் மட்டுமே தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என அரசு மக்களிடம் வலியுறுத்தி உள்ளது.

 Karnataka may announces night curfew in december last week

கொரோனா காலகட்டத்தில் நாட்டில் முதன்முதலாக அதிக தளர்வுகளை அளித்தது கர்நாடக மாநிலம்தான். இங்குதான் முதலில் இ-பாஸ் முறை ஒழிக்கப்பட்டது. அனைத்துத் நடவடிக்கையும் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அங்கு இன்னும் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. இந்த நிலையில் அங்கு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கொரோனா 2-வது ஏற்பட்ட வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

கர்நாடகாவில் பெங்களூரு உள்ளிட்ட மாநிலம் முழுவதும் பல பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டும் என்பதால், கொரோனா அதிக அளவு பரவ வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு புத்தாண்டு கொண்டாட்ட கூட்டத்தை தவிர்க்கும் வகையில் டிசம்பர் 26 முதல் ஜனவரி 1 வரை இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கலாம் என அந்த மாநில தொழில்நுட்ப ஆலோசனைக் குழு சுகாதாரத் துறையிடம் பரிந்துரை செய்துள்ளது.

ஆரம்பித்தது பாஜக ஆட்டம்... சிபிஐ விசாரணையில் மகன்...அழகிரி சொல்லும் சட்டசபை தேர்தல் 'பங்கு' என்ன?ஆரம்பித்தது பாஜக ஆட்டம்... சிபிஐ விசாரணையில் மகன்...அழகிரி சொல்லும் சட்டசபை தேர்தல் 'பங்கு' என்ன?

குறிப்பாக பெங்களுருவில் உள்ள ஹோட்டல்கள், ரிஸார்ட்டுகள், பல்வேறு பகுதிகளில் புத்தாண்டு பார்ட்டியை கட்டுப்படுத்த வேண்டும் என அந்த குழு வலியுறுத்தி உள்ளது. தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளை நாங்கள் அரசிடம் கொண்டு செல்வோம். இது பற்றி அரசு நல்ல முடிவு எடுத்து அறிவிக்கும் என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது.

English summary
The state government is planning to ban New Year's party and implement night curfew in Karnataka as there is a possibility of a second wave of corona in January-February
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X