பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாட்டுச்சாணம் - சிறுநீரில் தயாரிக்கப்பட்ட சோப்புகளை பயன்படுத்துங்கள்.. கர்நாடக அமைச்சரின் உபதேசம்..!

Google Oneindia Tamil News

பெங்களூரு: மாட்டுச்சாணம் மற்றும் சிறுநீரில் தயாரிக்கப்பட்ட சோப்புகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என கர்நாடக கால்நடைத்துறை அமைச்சர் பிரபு சவுகான் உபதேசம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எப்படியோ அப்படி கர்நாடகாவிலும் ஒரு அமைச்சர் இருக்கிறார். அவர் அந்த மாநிலத்தின் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சராக இருக்கும் பிரபு சவுகான்.

Karnataka minister prabhu chuhan says, use soap, shampoos, made of cow dung, urine

எப்போது அவர் ஊடகங்களில் பேசினாலும் சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது. அந்த வகையில் பசுக்களை பாதுகாக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரபு சவுகான், மாட்டுச்சாணம் மற்றும் சீறுநீரில் இருந்து தயாரிக்கப்படும் சோப்பு, ஷாம்பு, உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் உபயோகிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

பசுவிலிருந்து கிடைக்கும் பால், தயிர், வெண்ணெய், நெய், உள்ளிட்ட பொருட்களை மட்டும் மக்கள் அதிகளவில் பயன்படுத்துகிறார்களே தவிர அதிலிருந்து கிடைக்கும் பஞ்சகவ்யா உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த பெரும்பாலானோர் முன்வருவதில்லை என கவலை தெரிவித்துள்ளார்.

பசுக்களை காக்க இது போன்ற பொருட்களை மக்கள் அதிகளவில் பயன்படுத்த முன் வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். கர்நாடக அமைச்சர் பிரபு சவுகானின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை... 236 மாவட்டங்களில் நடைபெறுகிறது!நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை... 236 மாவட்டங்களில் நடைபெறுகிறது!

இதனிடையே பசுவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெறவும் 50,000 தொடங்கி 3 லட்சம் வரை அபராதம் செலுத்தும் வகையிலும் அண்மையில் கர்நாடக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Karnataka minister prabhu chuhan says, use soap, shampoos, made of cow dung, urine
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X