பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Breaking News: கர்நாடக அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகாவில் நடைபெற்று வரும் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சிக்கு, அளித்து வந்த ஆதரவை 13 எம்எல்ஏக்கள் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். ஆட்சிக்கு ஆதரவு அளித்து அமைச்சரான நாகேஷ் என்ற சுயேச்சையும் இன்று தனது ஆதரவை வாபஸ் பெற்றுள்ளார்.

இதனிடையே காங்கிரஸ் அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் புதிதாக அமைச்சரவையை உருவாக்கலாம் என்றும் அதிருப்தியாளர்களுக்கு அமைச்சர் பதவியை கொடுத்து சமாளிக்கலாம் என்றும் திட்டம் தீட்டியுள்ளனர்.

அடுத்தடுத்து, கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அண்டை மாநில அரசியல் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அது தொடர்பான உடனடி அப்டேட்டுகளுக்கு இணைந்திருங்கள்.

Newest First Oldest First
4:57 PM, 8 Jul

கர்நாடக அரசிலிருந்து மஜதவை சேர்ந்த அமைச்சர்களும் ராஜினாமா ஏற்கனவே காங்கிரஸ் அமைச்சர்களும் ராஜினாமா செய்துவிட்டனர் அமைச்சரவையை மீண்டும் மாற்றியமைக்கப்போவதாக முதல்வர் அறிவிப்பு
3:39 PM, 8 Jul

காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமாவிற்கு கை மேல் பலன் ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்எல்ஏ ராமலிங்க ரெட்டி தரப்பில் பாசிட்டிவ் சிக்னல் ராமலிங்க ரெட்டி மகளும் காங். எம்எல்ஏவுமான சவுமியா ரெட்டி, கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு வர சம்மதம்
2:54 PM, 8 Jul

சுயேச்சை எம்எல்ஏ நாகேஷ் எடியூரப்பா உதவியாளரால் கடத்தப்பட்டுள்ளார்- அமைச்சர் சிவகுமார் குற்றச்சாட்டு விமான நிலையம் சென்று பார்ப்பதற்குள் விமானம் கிளம்பி விட்டதாக சிவகுமார் பேட்டி ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் பெற்ற நாகேஷ் வலுக்கட்டாயமாக விமானத்தில் கூட்டிச் செல்லப்பட்டதாக சிவகுமார் பேட்டி
2:50 PM, 8 Jul

அரசுக்கு ஆபத்தில்லை என்று முதல்வர் குமாரசாமி பேட்டி ஆட்சி சுமூகமாக நடைபெறும், பொறுத்திருந்து பாருங்கள் என்று பெங்களூரில் பேட்டி
2:32 PM, 8 Jul

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய கட்சி மேலிடம் நிர்பந்திக்கவில்லை- கர்நாடக மஜத அமைச்சர் தம்மண்ணா பேட்டி
1:56 PM, 8 Jul

மஜத எம்எல்ஏக்கள் அனைவரையும் ரிசார்ட்டில் தங்க வைக்க திட்டம் குடகு மாவட்டத்திலுள்ள ரிசார்ட்டுக்கு கிளம்புகிறார்கள் மஜத எம்எல்ஏக்கள்
1:30 PM, 8 Jul

கர்நாடக அரசியல் குளறுபடியில் பாஜகவிற்கு பங்கு இல்லை- லோக்சபாவில் ராஜ்நாத்சிங் அறிவிப்பு. ராஜ்நாத்சிங் பதிலில் திருப்தியடையாத காங்கிரஸ் எம்பிக்கள் வெளிநடப்பு
1:22 PM, 8 Jul

அதிருப்தி எம்எல்ஏக்களில் சுமார் 7 பேர் முடிவை மாற்றி திரும்புவார்கள்- கர்நாடக அமைச்சர் ஜமீர் அகமதுகான் பேட்டி
1:10 PM, 8 Jul

கர்நாடக காங்கிரஸ் அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா- சித்தராமையா அறிவிப்பு 21 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளதாக அறிவிப்பு அதிருப்தியாளர்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வசதியாக அமைச்சர்கள் ராஜினாமா

Karnataka political crisis live updates
English summary
The numbers of the Karnataka coalition further fell with an independent MLA, Harish tendering his resignation. Here is the live updates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X