பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கன மழை.. வெள்ளத்தில் மிதக்கும் கர்நாடகா.. மீட்பு பணிகளுக்கு ராணுவம் வரவழைப்பு

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகாவின் பல பகுதிகளிலும் கன மழை கொட்டி வருவதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகளுக்காக, ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

Karnataka rain and flood: Many people affected

வட கர்நாடகாவின் பெல்காம், பாகல்கோட், விஜயபுரா, உத்தரகன்னடா, பாகல்கோட் மாவட்டங்களிலும், மலைநாடு என்று அழைக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான, ஷிமோகா, ஹாசன், குடகு, சிக்மகளூர், மங்களூர், உத்தர கன்னடா, உடுப்பி மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வந்தது.

Karnataka rain and flood: Many people affected

இதன் காரணமாக இம்மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும், வட கர்நாடகாவிலுள்ள பெல்காம் நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நகரிலுள்ள ரயில் நிலையம் ஏறத்தாழ வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதையடுத்து, ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெள்ளத்தில் தவித்த, சுமார், 40,690 பேர் இதுவரை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இந்திய விமானப்படையின் 2 ஹெலிகாப்டர்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பெல்காம், பாகல்கோட், ரெய்ச்சூர் மற்றும் தார்வாட் மாவட்டங்களில் 8 என்டிஆர்எஃப் டீம்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கு தேவையான 4 உபகரணங்களுடன் மேலும் 4 என்.டி.ஆர்.எஃப் டீம்கள் பெலகாவிக்கு விமானம் மூலம் அனுப்பப்பட உள்ளன. இதனிடையே நேற்று முதல் பெங்களூர் உட்பட தென் கர்நாடக பகுதிகளிலும் மிதமானது முதல், கன மழை வரை மாறி மாறி பெய்து வருகிறது.

அனைத்து மாவட்ட நிர்வாகமும் உச்சபட்ச உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்று முதல்வர் எடியூரப்பா உத்தரவு பிறப்பித்துள்ளாரர்.
கர்நாடகாவில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் உதவி தேவைப்படும் மக்கள், உதவி கோர தொலைபேசி எண்களையும் அரசு வெளியிட்டுள்ளது.

தங்கள் தொகுதிகளில் தங்குமாறு அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் மற்ற மக்கள் பிரதிநிதிகளை கேட்டுக்கொள்ளுவதாகவும், தயவுசெய்து நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முதல்வர் எடியூரப்பா கேட்டுக் கொண்டுள்ளார்.

English summary
Karnataka rain: 8 NDRF teams has been deployed in Belagavi, Bagalkot, Raichur & Dharwad districts. 4 more NDRF teams will be airlifted to Belagavi with all required equipment to speed with the rescue operation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X