பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுவரை இல்லாத அளவு.. திடீரென அதிகரித்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை.. அதிர்ச்சியில் கர்நாடகா

Google Oneindia Tamil News

பெங்களூர்: கொரோனா வைரஸ் பிரச்சினை ஆரம்பித்ததில் இருந்து, முதல்முறையாக தற்போது கர்நாடகாவில் அதன் பாதிப்பு அதிகரித்துள்ளது.

Recommended Video

    55 நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்கிறது இந்தியா

    ஐடி நிறுவனங்கள் அதிகம் இருப்பதால் சர்வதேச பயணிகள் அவ்வப்போது வந்து செல்லக்கூடிய நகரம் பெங்களூரு. இதன் காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஆரம்ப காலகட்டங்களில் இங்கு அதிகமாக இருந்தது. தமிழகத்தை விட அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் பதிவாகி வந்தனர்.

    ஆனால் அதன்பிறகு கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக அந்த எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1007 பேருக்கு கொரோனா பாதிப்பு- 23 பேர் பலி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1007 பேருக்கு கொரோனா பாதிப்பு- 23 பேர் பலி

    அதிகரிப்பு

    அதிகரிப்பு

    ஆனால் நேற்று முதல் முறையாக ஒரே நாளில் 36 புதிய நோயாளிகள் பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எல்லா மாநிலங்களிலும் நோயாளிகள் எண்ணிக்கை குறையத் தொடங்கி இருக்கக் கூடிய நேரத்தில், அல்லது கட்டுப்பாட்டுக்குள் இருக்கக்கூடிய நேரத்தில், முதல் முறையாக கர்நாடகாவில் அதிகரித்திருப்பது யோசிக்க கூடிய விஷயமாக மாறியுள்ளது.

    நிலவரம்

    நிலவரம்

    கர்நாடகாவில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 315 ஆக, அதிகரித்துள்ளது. இதேபோல பெங்களூரைச் சேர்ந்த 66 வயது நபர் நேற்று பலியாகியுள்ளார். கர்நாடகாவில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

    பெங்களூர் ஓட்டல் ஓனர்

    பெங்களூர் ஓட்டல் ஓனர்

    மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த 66 வயதாகும் இந்த நபர் பெங்களூரு நகரில் ரெஸ்டாரண்ட் நடத்தி வந்தார். கொரோனாவால் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்து, கடந்த சில நாட்களாக வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த அவர் நேற்று பலியானார்.

    குழந்தைகள்

    குழந்தைகள்

    புதிதாக 24 மணிநேரத்தில் பதிவாகியுள்ள 36 நோயாளிகளில் 5 பேர் பெங்களூரைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் மாநிலத்தின் பிற பகுதிகள், குறிப்பாக, வட கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள். இதில், 14 பேர் பெண்கள் ஆகும். கல்புர்கி நகரைச் சேர்ந்த 5 வயது சிறுவன் மற்றும் விஜயபுரா நகரைச் சேர்ந்த ஒன்றரை வயது பெண் குழந்தை போன்றவையும் இந்த பட்டியலில் இணைந்துள்ளன.

    English summary
    Karnataka registered as match as 36 coronavirus patients in 24 hours, this is the single day highest number for that state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X