பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மூடப்பட்ட ஆய்வகங்கள்.. காத்திருக்கும் முடிவுகள்.. கர்நாடகாவில் மிகப்பெரிய உச்சம் வரலாம்..மக்கள் கவலை

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகாவில் ஞாயிற்றுக்கிழமை வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. ஒரே நாளில் கர்நாடகாவில் 1,267 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. நேற்று கொரோவால் 16 பேர் மரணம் அடைந்துள்ளனர். கர்நாடகாவின் பெங்களூருவில் மட்டும் ஞாயிற்றுக்கிழமை 783 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா... அச்சத்தில் மக்கள்

    கடந்த ஒரு வாரத்தில், கர்நாடகாவில், முக்கியமாக பெங்களூரில் கொரோனா தொற்று எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது, தினசரி கொரோனா தொற்று பாதிப்பு கர்நாடகாவில் ஒவ்வொரு நாளும் 150-200 என்ற மட்டத்திலிருந்து 300 முதல் 400 வரை அதிகரித்தது. இந்நிலையில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், தலா 450 கேஸ்கள் பதிவாகின.

    Karnataka reported an unusually high number of new cases on sunday

    சனிக்கிழமையன்று, கர்நாடகாவில் இதுவரை இல்லாத அளவாக 918 கொரோனா கேஸ்கள் பதிவாகின, அவற்றில் 596 பெங்களூருவில் இருந்து மட்டுமே வந்திருந்தன. இந்த சூழல் இன்று கர்நாடகா மாநிலதிதில் இதுவரை இல்லாத உச்சபட்சமாக 1,267 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் மட்டும் 783 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 15 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

    மருத்துவமனையில் அட்மிட் ஆன அடுத்த சில நாளிலேயே மரணம்.. உயிரிழப்பு அதிகரிப்பின் பகீர் பின்னணிமருத்துவமனையில் அட்மிட் ஆன அடுத்த சில நாளிலேயே மரணம்.. உயிரிழப்பு அதிகரிப்பின் பகீர் பின்னணி

    திடீரென அசாதாரணமான அளவு கொரோனா தொற்று பரவி வருவது கர்நாடகா மக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது. சோதனை செய்யும் ஊழியர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியானதால் இரண்டு முக்கிய அரசாங்க ஆய்வகங்கள் மூடப்பட்டது. இதனால் 11,500 க்கும் மேற்பட்ட மாதிரிகளின் முடிவுகள் வெளிவராமல் இருநதன.,இந்த சூழலில் அடுத்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் தான் கர்நாடகாவில் இதுவரை இல்லாத அளவிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கர்நாடகாவில் கடந்த மாதம் வரை 3,500 க்கும் குறைவான தொற்றுநோய்கள் இருந்தன. ஆனால் இந்த மாதத்தில் எண்ணிக்கை 13,000 த்தை கடந்தது . இறப்பு புள்ளிவிவரங்களும் கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்துள்ளன, இந்த மாதத்திற்கு முன்பு 54 ஆக இருந்தது, இப்போது 207 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் தற்போதைய நிலையில் 13,190 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7,509 பேர் குணம் அடைந்துவிட்ட நிலையில் 5,470 பேர் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    தற்போதைக்கு, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி, தெலுங்கானா, ஆந்திரா, ஹரியானா, மாநிலங்களை போல் கர்நாடகாவிலும் கொரோனா தொற்று அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Karnataka reported an unusually high number of new cases on Saudday, more than double the number of its previous highest single-day figure
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X