பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கர்நாடகாவில் உயருகிறது கொரோனா .. திடீரென பெங்களூருவில் கிடுகிடு... மக்கள் அச்சம்

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் 1857 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றை விட இன்று 157 பேருக்கு அதிகமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா இரண்டாவது அலை கர்நாடகாவில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உச்சத்தில் இருந்தது. 45 ஆயிரம் வரை பாதிப்பு அதிகரித்தது. உயிரிழப்பும் தினசரி 500க்கும் மேல் ஏற்பட்டது. குறிப்பாக பெங்களூரு நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமலும், மூச்சுத்திணறல் ஏற்பட்டும் பலர் இறந்தனர். கொரோனா 2வது அலை ஜூன் மாதத்தில் இருந்து குறைய தொடங்கியது. இப்போது வெகுவாக குறைந்தவிட்டது. இயல்பு நிலையும் திரும்பிவிட்டது.

செப்டம்பர் மாதத்தில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வாய்ப்பு.. எய்ம்ஸ் இயக்குநர் செப்டம்பர் மாதத்தில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வாய்ப்பு.. எய்ம்ஸ் இயக்குநர்

கர்நாடகாவில் உயருகிறது

கர்நாடகாவில் உயருகிறது

ஆனால் கொரோனா பரவல் மீண்டும் கர்நாடகாவில் இன்று அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் கொரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் 1857 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றை விட இன்று 157 பேருக்கு அதிகமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஒட்டுமொத்தமாக இதுவரை 2893556 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா

கொரோனா

கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 2050 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை கர்நாடகாவில் ஒட்டுமொத்தமாக 2833276 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இன்று ஒரு நாளில் மட்டும் 29 பேர் இறந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 36352 பேர் உயிரிழந்துள்ளனர்.

என்ன காரணம்

என்ன காரணம்

தலைநகர் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு திடீரென உயர்ந்துள்ளது. நேற்று 400 ஆக இருந்த தினசரி பாதிப்பு இன்று 551 ஆக உயர்ந்துள்ளது. அதுவே கர்நாடகாவில் இன்று கொரோனா உயர காரணம் ஆகும். மீண்டும் பெங்களூருவில் கொரோனா உயர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி உளளது. மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிந்து செயல்பட்டால் பரவலை தடுகக முடியும் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

அச்சம்

அச்சம்

3வது அலைக்கான அச்சம் அதிகமாக நாடு முழுவதும் உள்ளது. கொரோனா பரவல் பெரிய அளவில் இன்னமும் நாடு முழுவதும குறையவில்லை. 39 ஆயிரம் என்கிற அளவிலேயே உள்ளது. உயிரிழப்பும் 500 என்கிற அளவில் உள்ளது. கொரோனா பாதிப்பு மகாராஷ்டிரா, கேரளாவில் அதிகமாக உள்ளது. இப்போது கர்நாடகாவில் உயர தொடங்கி உள்ளது. எனவே விழிப்புடன் இருப்பது கொரோனா பிரச்சனையை தடுக்க உதவும். தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனே செலுத்திக் கொள்வது நல்லது.

English summary
Karnataka reports 1,857 Covid cases today, 152 more than yesterday; Bengaluru cases rise to 551 from 400.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X