பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எடியூரப்பாவை தொடர்ந்து கர்நாடகா மாநில சுகாதார துறை அமைச்சர் ஸ்ரீராமலு கொரோனாவால் பாதிப்பு

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகாவின் சுகாதார அமைச்சர் பி ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது சோதனையில் உறுதியாகி உள்ளது. நேர்மறை சோதனை செய்துள்ளார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அண்மையில் தன்னை தொடர்பு கொண்ட அனைவரும் தனிமைப்படுத்திக் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

ஸ்ரீரமுலு ஞாயிற்றுக்கிழமை வெளியட்ட ட்வீட்டுகளில் இந்த தகவல்களை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் "காய்ச்சல் அறிகுறிகளைத் தொடர்ந்து நான் இன்று கொரோனா வைரஸுக்கான பரிசோதனை செய்து கொண்டேன். இதில் எனக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

karnatakas Health Minister B Sriramulu tested positive for the novel coronavirus

"முதல்வரின் (பி.எஸ். எடியூரப்பா) தலைமையில், எனது துறை உட்பட அரசாங்கத்தின் அனைத்து துறைகளும் கோவிட் -19 க்கு எதிராக கடுமையாக உழைத்து வருகின்றன. கொரோனா தோன்றிய காலத்திலிருந்தே, 30 மாவட்டங்களுக்குச் சென்று மக்களுக்கு தேவையானதை செய்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற அரசாங்கத்தின் விருப்பத்திற்கு இசைவாக பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்தப் பின்னணியில்தான் நான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறப் போகிறேன், " என்று கூறியுள்ளார்.

அமித் ஷாவிற்கு புதிதாக கொரோனா டெஸ்ட் எடுக்கவில்லை.. உள்துறை விளக்கம்.. மனோஜ் திவாரி டிவிட் நீக்கம்!அமித் ஷாவிற்கு புதிதாக கொரோனா டெஸ்ட் எடுக்கவில்லை.. உள்துறை விளக்கம்.. மனோஜ் திவாரி டிவிட் நீக்கம்!

அண்மையில் முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து எடியூரப்பா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் அம்மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இப்போது அம்மாநில சுகாதார துறை அமைச்சருக்கும் தொற்று வந்திருப்பது உறுதியாகி உள்ளது.

English summary
karnataka's Health Minister B Sriramulu has tested positive for the novel coronavirus. Earlier this month, Karnataka Chief Minister BS Yediyurappa also tested positive for Covid-19. The state's Leader of Opposition and former CM Siddaramaiah of the Congress also declared that his samples too had returned positive for the infection.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X