பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோர்ட் பற்றி பேசமாட்டேன்.. விப் பிறப்பிக்க சட்டசபை குழு தலைவருக்கு அதிகாரம் உள்ளது: சபாநாயகர் அதிரடி

Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடகத்தில் உச்சகட்ட பரபரப்பு..நம்பிக்கை வாக்கெடுப்பு..

    பெங்களூர்: விப் உத்தரவு பிறப்பிக்க கட்சிகளுக்கு அதிகாரம் உள்ளது என கர்நாடக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

    எம்எல்ஏக்கள் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க கட்டாயப்படுத்த கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் காங்கிரஸ் சட்டசபை குழு தலைவர் சித்தராமையா, தன்னை இந்த வழக்கில் சேர்க்கவில்லை. எனது பணியை மேற்கொள்ள எனக்கு அனுமதி வழங்கவில்லை என்று தெரிவிக்கிறார். நாங்கள் உச்சநீதிமன்றத்தை மதிக்கிறோம். அதேநேரம், சந்தேகத்திற்கு இடமின்றி, சொல்ல விளைவது, "காங்கிரஸ் சட்டசபை குழு தலைவர் எடுக்கும் முடிவுக்கு முழு சுதந்திரம் தருகிறேன். நான் உச்சநீதிமன்ற உத்தரவு பற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை" என்றார் சபாநாயகர்.

    Karnataka Speaker allows whip to be applied on all MLAs

    இதன் மூலம், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டசபையில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று அந்தந்த கட்சி தலைவர்கள், விப் உத்தரவு பிறப்பிக்க தடையில்லை என கூறியுள்ளார் சபாநாயகர்.

    சபாநாயகர் மேலும் கூறுகையில், விப் பிறப்பித்த பிறகும், சட்டசபைக்கு சில காரணங்களால் எம்எல்ஏக்கள் வராவிட்டால், அவர்கள் அதற்கு அனுமதி பெற்றிருக்க வேண்டும். சட்டசபை குழு தலைவர் அதற்கு அனுமதி கொடுத்திருந்தால் நானும் அதற்கு அனுமதி தருவேன்.

    கர்நாடக அரசியலில் ட்விஸ்ட்.. அரசை காப்பாற்ற மாஸ் பிளான் செய்த காங்.-மஜத! சட்டசபையில் சித்து செம மூவ் கர்நாடக அரசியலில் ட்விஸ்ட்.. அரசை காப்பாற்ற மாஸ் பிளான் செய்த காங்.-மஜத! சட்டசபையில் சித்து செம மூவ்

    அரசியல் சாசனத்தின் 10வது அட்டவணைப்படி விப் உத்தரவு பிறப்பிக்க கட்சி தலைமைக்கு கொடுத்திருக்கும் உரிமையில் சாபாநாயகராகிய நான் தலையிட மாட்டேன். இவ்வாறு சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்தார்.

    இதன் மூலம், எம்எல்ஏக்களை சட்டசபை வர கட்டாயப்படுத்த கூடாது என சுப்ரீம் கோர்ட், தெரிவித்த கருத்துக்கு எதிரான நிலைப்பாட்டை சபாநாயகர் எடுத்துள்ளார். நீதிமன்றம் vs சட்டசபை அதிகாரம் என்ற நிலைக்கு கர்நாடக அரசியல் வந்துள்ளதாகவே தெரிகிறது.

    English summary
    Karnataka Speaker Ramesh Kumar has allowed for a whip to be applied on all MLAs in the Karnataka legislative Assembly. "This house holds the Supreme Court in the highest esteem. Simultaneously, let me make it abundantly clear to the CLP leader that this office is not restraining you (him) from doing or exercising any of (his) authorities.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X