பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாடு முழுவதும் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் இது ஒரு எச்சரிக்கை.. சித்தராமையா தடாலடி

Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடக சபாநாயகர் அதிரடி... மேலும் 14 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம்

    பெங்களூர்: நாடு முழுவதிலும் பாஜக வலையில் விழும் எம்எல்ஏக்களுக்கு கர்நாடக சபாநாயகர் வலுவான ஒரு எச்சரிக்கையை பிறப்பித்துள்ளார் என்று கர்நாடக சட்டசபை காங்கிரஸ் குழு தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    கர்நாடக காங்கிரஸ், மஜதவை சேர்ந்த, 14 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் கே ஆர் ​​ரமேஷ் குமார் நேற்று உத்தரவிட்டார். எனவே, தகுதி நீக்கம் செய்த அதிருப்தியாளர்கள் எண்ணிக்கை 17க்கு உயர்ந்துள்ளது.

    Karnataka speaker sent strong signal, says Siddaramaiah

    15வது சட்டமன்றம் 2023 மே மாதம் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்யும். அதுவரை, இந்த 17 பேரும் இடைத்தேர்தலில் கூட போட்டியிட முடியாத நிலை உருவாகியுள்ளது.

    கிளி ஜோசியத்தை கையில் எடுத்த திமுக.. ஏலே பாண்டி நாகம்மாளுக்கு சீட் எடு!கிளி ஜோசியத்தை கையில் எடுத்த திமுக.. ஏலே பாண்டி நாகம்மாளுக்கு சீட் எடு!

    14 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் கே.ஆர்.​​ரமேஷ் குமார் எடுத்த முடிவை கர்நாடக காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா வரவேற்றுள்ளார். இது பாஜகவின் வலையில் விழக்கூடிய, மக்கள் பிரதிநிதிகளுக்கு வலுவான செய்தியை அனுப்பும்.

    சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் எடுத்த முடிவை நான் வரவேற்கிறேன். சபாநாயகரின் இந்த நேர்மையான முடிவு பாஜகவின் வலையில் விழக்கூடிய நாட்டின் அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் வலுவான சமிக்ஞைகளை அனுப்பும், என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

    இதனிடையே, தகுதிநீக்கங்களுக்குப் பிறகு அதிருப்தியாளர்கள் யாராவது உங்களுடன் தொடர்பு கொண்டார்களா, என்று நிருபர்கள் கேட்டபோது, சித்தராமையா கூறுகையில், "அவர்களில் இருவர் என்னை தொலைபேசியில் அழைத்தார்கள், ஆனால் நான் அவர்களிடம் பேசவில்லை, நான் பழைய பிரச்சினையைப் பற்றி மீண்டும் பேச விரும்பவில்லை. " என்று சித்தராமையா தெரிவித்தார்.

    English summary
    Karnataka Congress leader and former chief minister Siddaramaiah on Sunday welcomed Assembly Speaker K R Ramesh Kumar's decision to disqualify 14 rebels legislators.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X