பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கர்நாடகாவில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல் குறித்து மத்திய அரசுடன் ஆலோசனை

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகாவில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசுடன் ஆலோசனை நடத்துவோம் என அம்மாநில அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

எல்லை தாண்டி வந்து சட்டவிரோதமாக மாநிலங்களில் குடியேறி இருப்பவர் விவரங்களை கண்டறிவதற்காக தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.

Karnataka to discuss with Centre on NRC

அஸ்ஸாமில் இதன் மூலம் 90,000 லட்சம் பேர் குடியுரிமை அற்றவர்களாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது. டெல்லி, ஹரியானா உள்ளிட்ட பல மாநில அரசுகளும் இதை அமல்படுத்த முனைப்பு காட்டுகின்றன.

இந்த வரிசையில் கர்நாடகாவும் தற்போது இணைந்திருக்கிறது. இது தொடர்பாக கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியதாவது:

பெங்களூரு உள்ளிட்ட பெரிய நகரங்களில் வெளிநாட்டவர் வந்து தங்கி குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: வொர்லி தொகுதியில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே வேட்புமனு தாக்கல்மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: வொர்லி தொகுதியில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே வேட்புமனு தாக்கல்

ஆகையால் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை அமல்படுத்துவது குறித்து ஒருவாரத்தில் முடிவெடுப்போம். கர்நாடகாவில் எல்லைகள் கடந்து ஏராளமானோர் வந்து குடியேறி உள்ளனர்.

அவர்கள் தொடர்பான விவரங்களையும் சேகரித்து வருகிறோம். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வோம் என்றார்.

English summary
Karnataka Home Minister Basavaraj Bommai said that "Karnataka is one of the states where there people from across the border have come and settled. We are collecting information and will discuss it with the Union Home Ministry and go forward," Karnataka Home Minister Basavaraj Bommai told reporters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X